செம்பரா மலைமுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செம்பரா, கேரளாவின் வயநாடு மாவட்டத்திலேயே உயரமான மலைமுடி ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 2100 மீ. உயரமானது. மெப்படி நகரத்துக்கு அருகிலுள்ள இது மாவட்டத் தலைநகரான கல்பெட்டா-விலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வயநாடு மலைக்கூட்டங்களின் பகுதியான இது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் நீலகிரி மலைத்தொடர்களையும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வெல்லாரி மலைகளையும் இணைக்கும் விதமாக இச்சிகரம் அமைந்துள்ளது. மெப்படி நகரிலிருந்து நடந்தே மலையுச்சியை அடையலாம். மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மலையேற்றத்துக்கான கருவிகளையும் வழிகாட்டிகளையும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்து தருகின்றது. மலையேற்றம் செய்வதற்கு மெப்படியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெறுவது அவசியம். உச்சிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இதய வடிவிலான ஏரி ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாகும். இந்த ஏரி எப்போதும் வறட்சி அடைந்தது இல்லை என நம்பப்படுகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பரா_மலைமுடி&oldid=2416487" இருந்து மீள்விக்கப்பட்டது