நேத்ராவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேத்ராவதி ஆறு

நேத்ராவதி ஆறு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள குதிரேமுக் பகுதியில் உற்பத்தியாகி வரும் ஆறு. இது தர்மஸ்தாலா நகரின் குறுக்கே பாய்கிறது. இது பின்னர் குமாரதாரா ஆற்றுடன் சேர்ந்து பின்னர் அரபிக் கடலில் கலக்கிறது. இது ஏறத்தாழ 1353 ச.கி.மீ வடிநிலப் பரப்பைக் கொண்டது.

வேளாண்மை மற்றும் மீன்பிடி[தொகு]

நேத்ராவதியின் கரைகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்களின் தொழில் வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல் ஆகும். பருவமழை ஓய்ந்த காலங்களில் இந்த ஆறே வேளாண்மைக்கு ஆதாரம் ஆகும். இவ்வாறு மிகுந்த நீர் வளப்பம் கொண்டது. இவ்வாற்றில் மீன்பிடியை நம்பியே நிறைய குடும்பங்கள் வாழ்கின்றன.மேலும் இவ்வாற்றின் படுகைகளில் இருந்து மணல் வாரப்படுகிறது. இவ்வாற்றில் அமைந்துள்ள பாலம் மங்களூர் நகரின் நுழைவாயிலாகும். நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்த ஆறானது பாந்த்வால் ஆறு (Bantwal River) என அழைக்கப்பட்டது. இந்த ஆறானது கர்நாடகம் மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேத்ராவதி_ஆறு&oldid=1922654" இருந்து மீள்விக்கப்பட்டது