சண்டோலி தேசியப் பூங்கா
Appearance
சண்டோலி தேசியப் பூங்கா | |
---|---|
சண்டோலி புலிகள் காப்பகம் | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
சண்டோலி தேசியப் பூங்காவிலுள்ள ஓணான்களுள் ஒன்று | |
அமைவிடம் | இந்தியா, மாகாராஸ்டிரம் |
பரப்பளவு | 317.67 சதுர கிலோமீட்டர்கள் (122.65 sq mi) |
நிறுவப்பட்டது | மே 2004 |
நிருவாக அமைப்பு | மகாராஸ்டிர வனத்துறை |
வலைத்தளம் | mahaforest |
சண்டோலி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Chandoli National Park (இந்தி: चांदोली राष्ट्रीय उद्यान)[1] இந்தியாவின் மகாராஸ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்காவானது 2004 ஆம் ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்டது.[2] இது 317.67 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தியதி முதல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுலில் உள்ளது. தற்போது இங்கே 9 புலிகளும் 66 சிறுத்தைகளும் உள்ளன.இந்தப் பூங்காவானது சண்டோலி அணைக்கட்டின் அருகில் உள்ளது. இதன் அமைவிடம் 73°40' & 73°53' E மற்றும் 17°03' & 17°20'N ஆகும். இங்கு 23 வகையான பாலூட்டி இனங்கள், 122 வகையான பறவை இனங்கள், 20 வகையான ஊர்வன இனங்கள் உள்ளன. வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, அணில்கள், கரடிகள்,காட்டெருது போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "loksatta.com". Archived from the original on 2013-07-28. பார்க்கப்பட்ட நாள் 2013-12-10.
- ↑ "Times of India". The Times Of India. 2004-12-22. http://timesofindia.indiatimes.com/articleshow/967367.cms. பார்த்த நாள்: 2006-09-27.