பாணதீர்த்தம் அருவி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| பாணதீர்த்தம் அருவி | |
|---|---|
பாணதீர்த்தம் அருவி | |
| அமைவிடம் | காரையார் |
பாணதீர்த்தம் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட காரையார் அணை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த பாண தீர்த்த அருவி பாதுகாக்கும் பொருட்டு பாண்டியர்களின் வழித்தோன்றல்களாக உள்ள சிங்கம்பட்டி மன்னர்கள் காலம் காலமாக கொண்டுள்ளனர்.ஆகையால்,இவர்களுக்கு தீர்த்தபதி என்ற பட்டத்தை பெற்றுள்ளனர்.ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]இது பாபநாசத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், காரையார் அணை அருகே அமைந்துள்ளது.
சுற்றுலா
[தொகு]அகத்தியர் அருவியிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
[தொகு]திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து காரையார் அணைக்கு பேருந்து வசதி உள்ளது.காரையார் அணையிலிருந்து படகில் 15 நிமிட பயணத்திற்கு பிறகு அருவியை அடையலாம். படகில் சென்று வர கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்படுகிறது.