உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லையன கிரி

ஆள்கூறுகள்: 13°23′27.5″N 75°43′17″E / 13.390972°N 75.72139°E / 13.390972; 75.72139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்லையன கிரி
Melgadduge
முல்லையன கிரி is located in கருநாடகம்
முல்லையன கிரி
முல்லையன கிரி
Location of Karnataka
உயர்ந்த புள்ளி
உயரம்1,925 m (6,316 அடி)
பட்டியல்கள்இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரங்களின் பட்டியல்
ஆள்கூறு13°23′27.5″N 75°43′17″E / 13.390972°N 75.72139°E / 13.390972; 75.72139
புவியியல்
அமைவிடம்சிக்மகளூரு, கருநாடகம், இந்தியா
மூலத் தொடர்பாபா புதன்கிரி
நிலவியல்
பாறையின் வயது35

முல்லையன கிரி (Mullayana Giri) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் அமைந்துள்ள மிக உயரமான சிகரமாகும். முள்ளையன கிரி சிக்மகளூர் வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சந்திர துரோண மலைத்தொடர்களில் 13 ° 23′26 ″ வடக்கிலும் 75 ° 43′18 ″ கிழக்கிலும் 1,930 மீட்டர் (6,330 அடி) உயரத்துடன் அமைந்துள்ளது.[1] இது கர்நாடகாவின் மிக உயர்ந்த சிகரமாகும். முல்லயனகிரியின் உச்சியில் ஒரு காவல் வானொலி ஒளிப்பரப்பு நிலையம் உள்ளது. சீதலாயனகிரி என்ற ஒரு முக்கிய சிகரம் இந்த இடத்தை ஒட்டியுள்ளது.

கோயில்

[தொகு]

மலை உச்சியிலுள்ள ஒரு சிறிய கோயிலில் (கல்லறை) இருந்து இந்த சிகரத்திற்கு இதன் பெயர் கிடைக்கிறது, இது "முல்லப்பா சுவாமி" என்ற முனிவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் மலையுச்சியில் இரண்டு அடி மட்டுமே இருந்த குகைகளில் தியானித்ததாக நம்பப்படுகிறது. குகைகள் அணுகக்கூடியவையாகவும் மிகவும் ஆழமில்லாமலும் இருக்கிறது. அவை கோயிலின் கர்ப்பகிரகத்திற்கு நேரடி நுழைவாயிலைக் கொண்டுள்ளன. இது இப்போது கோவில் பூசை செய்பவர்களால் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வலுவான சித்தர் கலாச்சாரத்தின் பல பதிப்புகளைத் தவிர, தெய்வத்தைப் பற்றிய தோற்றம் அல்லது எந்த தகவலும் தெளிவற்றதாகவே உள்ளது. முல்லை என்பது பழைய கன்னட மொழியில் காட்டைக் குறிக்கிறது.

மலையேற்றம்

[தொகு]

முன்னதாக, தற்போதைய சாலைகள் மற்றும் 464 கல் மற்றும் கான்கிரீட் படிகள் இல்லாதபோது, சிகரத்தை அடைய ஒரு பாதை பயன்படுத்தப்பட்டது. இது 'சர்ப்பதாரி' அல்லது 'சர்ப்பநாடி' என்று அழைக்கப்படுகிறது. இப்போது இது அடிக்கடி பயன்படுத்துவதில்லை என்றாலும், இந்த பாதை மலையேறுபவர்களால் போற்றப்படுகிறது.

புகைப்படங்கள்

[தொகு]

</gallery> படிமம்:Mullayanagiri1.JPG|முல்லையன கிரிக்கு செல்லும் வழியில் படிமம்:Mullaiyangiri hills.jpg|முல்லையங்கிரி மலைகள் </gallery>

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District : Chickmagalur State : Karnataka". National Informatics Centre. Archived from the original on 2019-07-09. பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mullayanagiri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Tours and Trip Packages பரணிடப்பட்டது 2019-06-18 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லையன_கிரி&oldid=3603873" இலிருந்து மீள்விக்கப்பட்டது