மூணார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூன்னாறு
—  நகரம்  —
மூன்னாறு மலைவாழிடம்
மூன்னாறு
இருப்பிடம்: மூன்னாறு
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 10°07′N 77°04′E / 10.117°N 77.067°E / 10.117; 77.067ஆள்கூற்று: 10°07′N 77°04′E / 10.117°N 77.067°E / 10.117; 77.067
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம்  • இடுக்கி
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி மூன்னாறு
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

பெருநகர்


68,205 (2001)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

557 கிமீ2 (215 சதுர மைல்)

1,450 metres (4,760 ft)

இணையதளம் tourism idukki.nic.in tourism


மூன்னாறு தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில் ஆகும். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூன்னாறு. இந்நகரின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில்,இங்கே வந்தார். அவர் பெயரில் உள்ள முன்றே என்பதே மருவி பின் நாளில் மூனாறு என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது, போதிய ஆதாரம் இல்லை.

வரலாறு[தொகு]

இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை விசாயத்தை தொடங்கினர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது. [2]

சுற்றுலா[தொகு]

மாட்டுப்பட்டி அணை, மூணாறு   அருகில்.

தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூன்னாறு எனப் பெயர் பெற்றது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூன்னாறு மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. ராஜமலைத் தொடரில் அழிந்துவரும் விலங்கினமான வரையாடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளது. மூன்னாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது. இதன் சுற்றுவட்டத்தில் மாட்டுப்பட்டி அணை உள்ளது.

மூணாறில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாற்றிற்கு மதுரையில் இருந்தும், திருச்சூரில் இருந்தும் பேருந்தின் வாயிலாக செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து போடிநாயக்கனூர் என்ற ஒரு மழைமறைவு நகரிலிருந்து 2 மணித்தியாலத்தில் சிற்றுந்தில் செல்லக்கூடிய வசதி படைத்தது.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது

இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.

1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.

தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.

மூனாறு தேயிலைத் தோட்டங்கள்

மேற்கோள்கள்[தொகு]


புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூணார்&oldid=1909867" இருந்து மீள்விக்கப்பட்டது