உடுமலைப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உடுமலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
உடுமலைப்பேட்டை
—  தேர்வு நிலை நகராட்சி  —
உடுமலைப்பேட்டை
இருப்பிடம்: உடுமலைப்பேட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°35′N 77°14′E / 10.58°N 77.24°E / 10.58; 77.24ஆள்கூறுகள்: 10°35′N 77°14′E / 10.58°N 77.24°E / 10.58; 77.24
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் உடுமலைப்பேட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி உடுமலைப்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

இராதாகிருஷ்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

61,133 (2011)

8,250/km2 (21,367/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.41 சதுர கிலோமீட்டர்கள் (2.86 sq mi)
இணையதளம் http://123.63.242.116/udumalaipet/abtus_municipality.htm


உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். [4]

உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,132 1குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,133 ஆகும். மக்கள்தொகையில் 29,958 ஆண்களும், 31,175 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,302 மற்றும் 42 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.83%, இசுலாமியர்கள் 14.49%, கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[5]

திருவிழாக்கள்[தொகு]

தேர் திருவிழா

ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும். திருவிழா சமயம் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். உடுமலைப்பேட்டை சுமார் 30+ கிராமங்களில் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடங்கி மழை பெய்கிறது. தேர் திருவிழா (Chariot festival) புகழ்பெற்றது.

சுற்றுலா தலங்கள்[தொகு]

 1. திருமூர்த்தி மலை
 2. திருமூர்த்தி அணை
 3. திருமூர்த்தி அருவி
 4. அமராவதி அணை
 5. அமராவதி முதலைப் பண்ணை [6]
 6. மறையாறு
 7. சின்னாறு

புகழ்பெற்ற மனிதர்கள்[தொகு]

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்[தொகு]

 1. கல்வி மாவட்டமான உடுமலைப்பேட்டையில் இராணுவ துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது.
 2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி
 3. பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 4. ஜிவிஜி விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 5. காந்தி கலாநிலையம் மேல்நிலைப்பள்ளி
 6. வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி
 7. மலையாண்டிபட்டினம் மேல்நிலைப்பள்ளி
 8. ஜல்லிபட்டி மேல்நிலைப்பள்ளி
 9. பூலாங்கினறு மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகளும்
 10. சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 11. ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 12. ஆர்கேஆர் மேல்நிலைப்பள்ளி,
 13. ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி
 14. லூர்து மாதா காண்வெண்ட் மேல்நிலைப்பள்ளி
 15. ஜிவிஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 16. பொன்நாவரசு பள்ளி இன்னும் பல தனியார் பள்ளிகளும்
 17. வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
 18. கமலம் கலை அறிவியல் கல்லூரி
 19. விஷ்டம் மேலாண்மை கல்லூரி
 20. சுகுனா கோழி வளர்ப்பு மேலாண்மை கல்லூரி
 21. ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி
 22. அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உடுமலையில் இயங்கி வருகிறது .தற்போது மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது நிருவிந்தியா தத்தா நிகேதன் மாண்டிசோரி பள்ளி இயங்கி வருகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. உடுமலைப்பேட்டை நகராட்சியின் இணையதளம்
 5. உடுமலைப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல்
 6. Amaravathi Crocodile Farm
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுமலைப்பேட்டை&oldid=2902045" இருந்து மீள்விக்கப்பட்டது