கேரளக் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளப்
பண்பாடு

மொழி
இலக்கியம்
நடனம்
இசை
நாடகம்
ஓவியம்
சினிமா
உணவு
உடை
கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்பு கலை

கேரளக் கட்டிடக்கலை என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான கேரளாவில் உருவாகி வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டிடக்கலைப் பாணிகளோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம், ஓடு என்பவற்றின் தாராள உபயோகமும், கூரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதன் வடிவமும், நேபாள, சீன மற்றும் பல்வேறு தென்கிழக்காசியக் கட்டிடக்கலைப் பாணிகளுக்கு நெருங்கியவையாகத் தெரிகின்றன.

பண்டைய தமிழ் அரசுகளிலொன்றான சேர நாடான இன்றைய கேரளம், மலைகள் முதலிய இயற்கை அரண்களினால் அயல் பிரதேசங்களிலிருந்து வேறாக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவ்வாறான பிரதேசங்களின் கட்டிடக்கலைப் பாணிகளின் தாக்கம் குறைவாக இருந்ததால், கேரளம் தனித்துவமான பாணியொன்றை வளர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததெனலாம். மர வளங்களைப் பெருமளவில் கொண்ட இந்த மாநிலத்தின் கட்டிடக்கலையில் மரத்தின் பெருமளவிலான பயன்பாடு இருந்தது விளங்கத் தக்கதே. கேரளக் கட்டிக் கலையின் முக்கியமான பகுதி அதன் கோயில் கட்டிடக் கலை ஆகும். அது தென்னிந்தியக் கோயில் கட்டிடக் கலையில் இருந்து வேறுபட்டு உள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் போன்ற சில மட்டும் தென்னிந்தியக் கட்டிக் கலையைச் சார்ந்ததாக உள்ளன. கேரளத்தின் மற்ற கோயில்கள் அதன் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பவை. தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையில் கோயில்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. என்றாலும் தமிழ்நாட்டு வீடுகள் கோயில் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. ஆனால் கேரளத்தின் வீடுகள் கோயில் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவை. கேரள வீட்டுக் கட்டிடக் கலையில் பிரபலமானது நாலுகெட்டு வீடு ஆகும்.[1]

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளிச் சுட்டிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளக்_கட்டிடக்கலை&oldid=3577054" இருந்து மீள்விக்கப்பட்டது