ஓடு
ஓடு (tile) என்பது கூரையில் வேயப் பயன்படும் சுடப்பட்ட மண் பொருள். ஓடுகள் பொதுவாக கூரைகள், தளங்கள், சுவர்கள், குளியலறைகள், அல்லது மற்ற பொருட்களை மறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
கூரை ஓடுகள்
[தொகு]கூரை ஓடுகள், மழையைத் தடுக்க முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது களிமண் அல்லது பலகைக்கல் போன்ற உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மூலம் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. கான்கிரீட் மற்றும் பிளாஸ்டிக் போன்ற நவீன பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. சில களிமண் ஓடுகள் நீர்ப்புகா வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.
தள ஓடுகள்
[தொகு]தள ஓடுகள் பொதுவாக பீங்கான் அல்லது கல் போன்ற பொருட்களின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
வரலாறு
[தொகு]பண்டைய மெசொப்பொத்தேமியாவில் ஓடு கூரைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகஆராட்ச்சிகள் கூறுகின்றன[1].தீயில் சுட்ட கூரை ஓடுகள் கிமு 3 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வாழ்ந்த கிரேக்கில் பயண்படுத்த பட்டன.
பழங்கால கிரேக்கத்தில் கூரை ஓடுகளின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் கொரிந்து நகரை சுற்றியுள்ள மிகவும் தடைசெய்யப்பட்ட பகுதியிலிருந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன,அங்கு கி.மு 700 மற்றும் 650 க்கு இடையில் அப்பல்லோ கோயிலில் சுட்ட கூரைகள் கண்டுபிடிக்கபட்டன.[2]வேகமாக இந்த கலாசரம் பரவி, கிழக்கு மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ளபல தளங்களில் ஐம்பது ஆண்டுகளுக்குள் கூரை-ஓடுகள் இருந்தன.
மேற்கோள்
[தொகு]- ↑ "பண்டைய கட்டுமானம்:கூடாரங்களிலிருந்து கோபுரங்க வரை".
- ↑ Orjian Wikander ,p.285
வெளி இணைப்புகள்
[தொகு]- Technical note in peg tile restoration work[தொடர்பிழந்த இணைப்பு]
- பொதுவகத்தில் Roof tiles தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.