காசர்கோடு மாவட்டம்
Jump to navigation
Jump to search
காசர்கோடு மாவட்டம் (மலையாளம்: കാസര്ഗോഡ് ജില്ല) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது[2] இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.
இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1992 கிமீ² ஆகும்.
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
இது காசர்கோடு, ஹொசதுர்கா ஆகிய இரண்டு வட்டங்களைக் கொண்டது.[3] இது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[3] அவை:
- மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி
- காசர்கோடு சட்டமன்றத் தொகுதி
- உதுமா சட்டமன்றத் தொகுதி
- காஞ்ஞங்ஙாடு சட்டமன்றத் தொகுதி
- திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி
இந்த சட்டமன்றத் தொகுதிகள் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[3]
சுற்றியுள்ளவை[தொகு]
![]() |
அரபிக்கடல் | கர்நாடகம் | கர்நாடகம் | ![]() |
அரபிக்கடல் | ![]() |
கர்நாடகம் | ||
| ||||
![]() | ||||
அரபிக்கடல் | கண்ணூர் மாவட்டம் | கர்நாடகம் |
குறிப்புகள்[தொகு]
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "Kasargod - After District Formation". Kasargod District. பார்த்த நாள் 2009-03-11.
- ↑ 3.0 3.1 3.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்