துங்கா ஆறு
துங்கா ஆறு | |
tagaru | |
River | |
தீர்த்த அள்ளியில் உள்ள சிப்பலகுட்டே என்னுமிடத்திற்கு அருகில் துங்கா ஆறு
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | கர்நாடகம் |
உற்பத்தியாகும் இடம் | கங்காமூலா |
- அமைவிடம் | சிக்மகளூர் மாவட்டம், கர்நாடகம், இந்தியா |
கழிமுகம் | துங்கபத்திரா ஆறு |
- அமைவிடம் | கூட்லி, பத்ராவதி, கர்நாடகம், இந்தியா |
நீளம் | 147 கிமீ (91 மைல்) ஏறத்தாழ. |
துங்கா ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உள்ள வராக பர்வதம் என்னும் மலையில் துவங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து செல்லும் இவ்வாறு சிமோகா நகரத்தில் உள்ள கூட்லி என்னுமிடத்தில் பத்ரா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது துங்கபத்ரா ஆறு என்று அழைக்கப் படுகிறது. பின் துங்கபத்ரா ஆறானது கிழக்கு நோக்கி ஓடி ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் இணைகிறது.
துங்கா ஆற்றின் மீது கஜனூர் என்ற இடத்திலும் துங்கபத்ராவின் மீது ஹோஸ்பேட் என்ற இடத்திலும் அணைகள் கட்டப் பட்டுள்ளன.
ஆன்மீக மையங்கள்
[தொகு]துங்கா ஆற்றின் மீது சிருங்கேரியில் பல கோவில்கள் உள்ளன. சாரதா கோவிலும் வித்யாசங்கரர் கோவிலும் இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.