குமரிக்கல் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமரிக்கல் மலை

குமரிக்கல் மலை (Kumarikkal Mala; மலையாளம் : കുമരിക്കല് മല) என்பது கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மட்டத்திலிருந்து சுமார் 2,522 மீட்டர் உயரத்தில் அமைந்த சிகரமாகும். இது சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் மிக உயரமான சிகரமாகவும், ஆனமலைப் பகுதியில் அமைந்த 2,000 மீட்டருக்கும் உயரமான மலைச் சிகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இந்த மலை உச்சியிலிருந்து சின்னார் நதி உருவாகிறது. நந்தலா மலை, வெள்ளைக்கல் மலை, விரியோட்டு மலை மற்றும் கோட்டகொம்பு மலை இப்பகுதியில் உள்ள முக்கிய சிகரங்கள் ஆகும். நீலகிரி வரையாடு இம்மலையின் சரிவுகளில் காணப்படுகிறது. [1] [2]

குமரிக்கல் மலைக்கு அருகே அமைந்துள்ள மலை வாழிடமாக மூணாறு அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Notification of Eravikulam-Rajamalau Sanctuary". Kerala Government.
  2. "Recovery plan for the Nilgiri tahr". Asia Biodiversity Conservation Trust. மூல முகவரியிலிருந்து 28 ஆகஸ்ட் 2017 அன்று பரணிடப்பட்டது.
  3. "Kumarikkal Mala - Highest Peaks Of South India" (en-US) (2020-08-20).
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரிக்கல்_மலை&oldid=3240748" இருந்து மீள்விக்கப்பட்டது