ஆனைமுடி (மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனைமுடி
ആനമുടി
Anaimudi
Anamudi from Munnar Gundumalai road.jpg
மூனாறு-உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையின் வலப்பக்கமாக, ஆனைமுடியின் தோற்றம்.
உயர்ந்த இடம்
உயரம்2,695 m (8,842 ft) [1][2]
இடவியல் முக்கியத்துவம்2,479 m (8,133 ft) [3]
பட்டியல்கள்Ultra
List of Indian states and territories by highest point
Naming
மொழிபெயர்ப்புயானை மலை (மலையாளம்)
புவியியல்
ஆனைமுடி ആനമുടി is located in கேரளம்
ஆனைமுடி ആനമുടി
ஆனைமுடி
ആനമുടി
கேரளத்தில் ஆனைமுடி உள்ள இடம்
அமைவிடம்கேரளம், தேவிகுளம் தாலுகா, எல்லை, இடுக்கி மாவட்டம் மற்றும் கொத்தமங்கலம் தாலுகா, எர்ணாகுளம் மாவட்டம்
மலைத்தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
நிலவியல்
பாறையின் வயதுCenozoic (100 to 80 mya)
மலையின் வகைFault-block
Climbing
First ascentGeneral Douglas Hamilton in 1862
Easiest routehike

ஆனமுடி (தமிழ்நாட்டில் ஆனைமுடி) என்னும் மலை முகடு தான் தென் இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடம். இதன் உயரம் 2, 695 மீ (8, 842 அடி). இது தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இடம். இம்மலை முகடு இரவிக்குளம் தேசிய பூங்காவின் தென் பகுதியிலே ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது. இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை முகடு முன்னார் (மூனார்) நகராட்சியின் கீழ் உள்ளது.

உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு தொடர்ச்சி மலை : ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றது. இதற்கு 17 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை. நாட்டிற்கு அதிகளவு தென்மேற்குப் பருவ மழை கிடைக்க இந்த மலைத் தொடர் பெரிதும் உதவி வருகிறது. இந்த மலைத் தொடரை ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய உலகப் பாரம்பரிய இடங்கள் குறித்து ஆராயும் குழு, உலகப் பாரம்பரிய மலைத் தொடராக தேர்வு செய்துள்ளது.இதற்கான குழுக் கூட்டத்தில், அல்ஜீரியா, கம்போடியா, கொலம்பியா, எஸ்தோனியா, எத்தியோப்பியா, ஈராக், ஜப்பான், மலேசியா, மாலி, மெக்சிக்கோ, கத்தார், ரஷ்யா, செனகல், செர்பியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாய்லாந்து ஆகிய, 17 நாடுகள் உறுதியான ஆதரவு அளித்தன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஏன் பாரம்பரியப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, இந்திய தரப்பில் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் விரிவான விளக்கங்களை அளித்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கவுரவம் ஏன்?பல்வேறு காரணங்களால்,இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை, "யுனெஸ்கோ'வின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு,உலகில் உள்ள இயற்கை மற்றும் பாரம்பரிய சிறப்புமிக்கஇடங்களை தேர்வு செய்து பாதுகாக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு, 2006ம் ஆண்டு இந்தியா கோரிக்கை விடுத்தது. இம்மலைத்தொடரில் 10க்கும் மேற்பட்ட தேசிய சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிகளுக்கான பகுதிகள், அரிய உயிரினங்கள், மூலிகைகள் ஆகியவை உள்ளதால் இக்கோரிக்கை விடப்பட்டது. இதை ஆய்வு செய்த "யுனெஸ்கோ' குழு, மேற்குத் தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. 962 இடங்கள்: ஒரு நாட்டிற்கு பெருமையும், அழகும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், இயற்கை வளங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. உலகின் முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க"யுனெஸ்கோ' நிறுவனம் முயற்சிக்கிறது. இதுவரை 962 இடங்கள் உலகின் கலாசார மற்றும்பண்பாட்டு இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 745 கலாசாரம் / பாரம்பரிய பிரிவிலும், 188 இயற்கைப் பிரிவிலும், 29 இடங்கள் இரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் தாஜ் மகால், பதேபூர் சிக்ரி, குதுப் மினார், அஜந்தா, எல்லோரா குகைகள், மாமல்லபுரம் சிற்பங்கள் உள்ளிட்ட 28 இடங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள் ளன. தற்போது 29வதாக மேற்குத் தொடர்ச்சி மலையும் (இயற்கைப் பிரிவு) இணைந்துள்ளது.

வடக்கு முதல் தெற்கு வரை: இந்தியாவின் மேற்கே மகாராஷ்டிரா - குஜராத் எல்லையில் தபதி ஆற்றுக்கு தெற்கே தொடங்கி, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் பரவிக் கன்னியாகுமரியில் முடிகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 1,600 ச.கி.மீ., சராசரி உயரம் 3,900 அடி. நாட்டின் 40 சதவீத நீர் உற்பத்தி இதன் மூலமே கிடைக்கிறது. இது அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்காற்றை மறைத்து, மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு நல்ல மழைப் பொழிவைத் தருகிறது. இம்மலைத் தொடரில், அகஸ்தியர், பெரியார், ஆனைமலை, தலைக்காவிரி, நீலகிரி,குதிரைமுக், சயாத்ரி மலை ஆகிய மலைத்தொடர்கள் உள்ளன.

சுற்றுலாத் தலங்கள்: மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்ற பெருமையை "ஆனைமுடி' சிகரம் பெற்றுள்ளது. இதன் உயரம் 8841 அடி. கொடைக்கானல், ஊட்டி, மூணாறு உள்ளிட்ட மலைவாச சுற்றுலாத் தலங்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன. பத்தில் ஒன்று இம்மலைத் தொடர், உலகில்"பல்லுயிரினம் மிக்க 10 இடங்களில்' ஒன்று. 5000 வகைத் தாவரங்கள், 139 வகைப் பாலூட்டிகள், 508 பறவைகள் மற்றும் 179 நீரிலும், நிலத்திலும்வாழும் உயிரினங்கள் இதில் வாழ்கின்றன. உலகளவில் அழியும் நிலையில் உள்ள 325 வகை உயிரினங்கள் இங்கு உள்ளன.

ஆறுகள்: மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, கிழக்கு நோக்கி பாயும் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை இதில் உற்பத்தி ஆகின்றன.

அணைகள்:இம்மலைத் தொடரில் உருவாகும் ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டு விவசாயம் மற்றும் மின்சாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

  1. "Anamudi". Kerala Tourism. 2014-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Explore Wild Munnar". Eravikulam National Park. 2014-12-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; peaklist என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; peakbagger என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைமுடி_(மலை)&oldid=3543259" இருந்து மீள்விக்கப்பட்டது