கபினி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமுக்கூடல் கபிணி

கபிணி அல்லது கபணி ஆறு தென்னிந்தியாவில் உள்ள 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. பின் காவிரி தமிழ்நாடு வழியாக பாய்ந்து, காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகே வங்காள விரிகுடாவில் முடிவடைகிறது.


கபிணி அணை[தொகு]

கபிணி அணை
Kabini dam full view.jpg
புவியியல் ஆள்கூற்று11°58′25″N 76°21′10″E / 11.9735°N 76.3528°E / 11.9735; 76.3528
அணையும் வழிகாலும்
வகைEarthen Dam with Left Bank spillway
Impoundsகபிணி ஆறு
உயரம்ஆற்றுப்படுகையில் இருந்து 166 அடி மேலே
நீளம்12,927 அடி.

கபிணி அணையானது கபிணி ஆற்றின் குறுக்கே மைசூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. 1974-இல் கட்டப்பட்டட இந்த அணையின் நீளம் 696 மீட்டர்கள். இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி 2,141.9 சதுர கிலோமீட்டர்கள். இந்த அணை பெங்களூர் நகரத்திற்கு குடிநீர் வழங்குகிறது. இந்த அணையின் மிகைநீரானது காவிரி ஆற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. இந்த அணையின் பரப்பளவு 55 எக்டேர்களாகும். இந்த அணையின் கொள்ளளவு 15.67 டி.எம்.சி ஆகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2017-09-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-06-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபினி_ஆறு&oldid=3238253" இருந்து மீள்விக்கப்பட்டது