குசால்நகர்
குசால்நகர் | |
|---|---|
நகரம் | |
| குசால்நகரா | |
| ஆள்கூறுகள்: 12°27′27″N 75°57′37″E / 12.457434°N 75.960332°E | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | குடகு |
| அரசு | |
| • நிர்வாகம் | நகராட்சி மன்றம் |
| • Administrator | நர்வதே விநாயக் கர்பாரி இந்திய ஆட்சிப் பணி |
| • முதன்மை அலுவலர் | கிருஷ்ண பிரசாத் |
| பரப்பளவு | |
| • நகரம் | 11.12 km2 (4.29 sq mi) |
| ஏற்றம் | 844 m (2,769 ft) |
| மக்கள்தொகை (2022)[1] | |
| • நகரம் | 29,268 |
| • அடர்த்தி | 2,600/km2 (6,800/sq mi) |
| • பெருநகர் | 80,000 |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 571 234 |
| தொலைபேசி இணைப்பு எண் | 08276 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-கேஏ |
| வாகனப் பதிவு | கேஏ-12 |
| இணையதளம் | www |
குசால்நகர் (Kushalanagar) இந்திய மாநிலமான கருநாடகாவின் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.[2] காவேரி நதியால் சூழப்பட்ட இது, குடகு மாவட்டத்தின் நுழைவாயிலாகும். இது குசால்நகர் வட்டத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது. திபெத்திய அகதிகளின் முகாம் குசால்நகருக்கு அருகில் பைலக்குப்பே என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பௌத்த மடம் 1972 ல் கட்டப்பட்டது. இங்கு பல பௌத்தக் கோயில்கள் அமைந்துள்ளதால் பைலக்குப்பேவுக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இது குடகுவில் ஒரு முக்கியமான வணிக மையமாகும்.[3][4]
பெயர்க் காரணம்
[தொகு]இப்பகுதியில் முகாமிட்டிருந்த ஐதர் அலி தனது மகன் திப்பு பிறந்த செய்தியைக் கேட்டதும் இந்த இடத்திற்கு குஷியல் நகர் ("மகிழ்ச்சியின் நகரம்") என்ற பெயரை வழங்கினார் என்று ஒரு பிலபலமான கதை உண்டு.[5] ஆனால் உண்மையில், திப்பு 1750 ஆம் ஆண்டில்தான் பிறந்தார். ஆனால் ஐதர் அலி 1760-களில்தான் முதல் முறையாகக் குடகுக்குள் நுழைந்தார். பிரித்தானியர்கள் கூர்க்கைக் கைப்பற்றிய பிறகு, 1834 ஆம் ஆண்டில் கூர்க்கில் அரசியல் முகவராக இருந்த கர்னல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் பிரேசரின் நினைவாக இது பிரேசர்பேட்டை என்று அழைக்கப்பட்டது.[6]
இதனையும் காண்க
[தொகு]சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "(Population & Area)Gazettee Notification about upgradation of Kushalnagar town from TP to TMC" (PDF). Retrieved 1 May 2024.
- ↑ "Kushalnagar Taluk formed; Kodagu now has five taluks". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-01. Retrieved 2022-01-09.
- ↑ "After Ponnampet, Kushalnagar may soon get taluk status" (in en-IN). The Hindu. 2020-11-30. https://www.thehindu.com/news/national/karnataka/after-ponnampet-kushalnagar-may-soon-get-taluk-status/article33214264.ece.
- ↑ "Upgrading from Town Panchayath to Town Municipal Council". Retrieved 15 July 2023.
- ↑ Anonymous (1855). A gazetteer of Southern India. Madras: Pharoah and Co. p. 580.
- ↑ Anon. 1908 The Imperial Gazetteer of India. Vol. 11. Oxford. page 12
