பேச்சு:கபினி ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகுமார், பகுப்புப் பெயர்கள் ஆறுகள், இந்திய ஆறுகள் என்று ஆறு, ஆறுகள் என்பன முன்னிலைப் படுத்தி இருக்கவேண்டும். பகுப்புகளை எப்படி நகர்த்துவது? நீங்கள் யாரேனும் நகர்த்துவீர்களா? இப்பொழுது நதிகள் என்றும், இந்திய நதிகள் என்றும் உள்ளன. ஆறு என்பது தமிழ்ச் சொல்லாக இருப்பது மட்டுமின்றி, இது மிகவும் நம் பண்பாட்டோடு நெருங்கிய, ஆழ்ந்த உறவுடையது. ஆறு என்றால் வழி. ஆற்றுப்படுத்துதல், வழிப்படுத்துதல். திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் உள்ள ஆற்றுப்படை என்பது பின்னர் வருவோருக்கு வழி காட்டுவது. ஒரு புலவன் கலைநயம் போற்றும் ஒரு செல்வந்தரைக் கண்டு பரிசு பெற்றால், மற்ற புலவர்களுக்கும், கலைஞர்களுக்கும், "இதோ, இங்கு ஒரு நல்லறிஞர் இருக்கின்றார், ஒரு நல்ல கலைச் சுவைஞர் இருக்கின்றார், வாருங்கள், வந்து பரிசு பெறுங்கள்" என்று பிற கலைஞர்களுக்கு வழி அமைத்துத் தருவது பற்றிய நூல் ஆற்றுப்படை. ஆற்றுப்படை என்பது ஓர் இலக்கிய வகை. ஆற்றொழுக்கு, "ஆறுவது சினம்", "சூடு ஆறட்டும்", "ஆற அமர யோசிப்போம்" என்று மிகப்பல இடங்களிலே வரும் சொற்கள்ளுக்கெல்லாம் தாயாக இருப்பது இந்த ஆறு. இதனை விலக்காமல் ஆறு என்றே ஆளுமாறு வேண்டிக்கொள்கிறேன். --செல்வா 13:07, 24 மார்ச் 2007 (UTC)

செல்வா, சொல்லின் பொருளாழம் புரிகிறது. இது குறித்து முன்பே உரையாடி இருக்கிறோம். பார்க்க:

பகுப்பு பேச்சு:நதிகள்--Sivakumar \பேச்சு 13:16, 24 மார்ச் 2007 (UTC)

சுட்டுக்கு நன்றி சிவகுமார். எப்படி பகுப்புகளை மாற்றுவது?--செல்வா 13:22, 24 மார்ச் 2007 (UTC)

செல்வா, ஒவ்வொரு பக்கமாக பகுப்புகளை சென்று மாற்ற வேண்டி இருக்கும். பகுப்பை நகர்த்தவும் முடியாது. வழிமாற்றவும் கூடாது. autowikibrowser கொண்டு இந்த மாற்றங்களை எளிதாகச் செய்யலாம். விரைவில் விக்கி துப்புரவாளர்கள் :) இதை கவனித்து விடுகிறோம். 2005லேயே இப்பெயரை மாற்ற வேண்டும் என்று உரையாடி முடிவெடுக்கப்பட்டது. இன்னும் மாற்றாமல் இருக்கிறது :(--ரவி 14:10, 24 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கபினி_ஆறு&oldid=117187" இலிருந்து மீள்விக்கப்பட்டது