உள்ளடக்கத்துக்குச் செல்

கரூர்

ஆள்கூறுகள்: 10°57′36″N 78°04′36″E / 10.960100°N 78.076600°E / 10.960100; 78.076600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கரூர் (கரூர் மாவட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரூர்
கரூர் நகரம்
கரூர் நகரம்
கரூர் is located in தமிழ் நாடு
கரூர்
கரூர்
கரூர், தமிழ்நாடு
கரூர் is located in இந்தியா
கரூர்
கரூர்
கரூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°57′36″N 78°04′36″E / 10.960100°N 78.076600°E / 10.960100; 78.076600
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
பகுதிசோழ நாடு, கொங்கு நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கரூர் மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்ஜோதிமணி
 • சட்டமன்ற உறுப்பினர்வே. செந்தில்பாலாஜி
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர் டி. பிரபுசங்கர், இ.ஆ.ப.
ஏற்றம்
147 m (482 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,34,506
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
639 xxx
தொலைபேசி குறியீடு91-(0)4324
வாகனப் பதிவுTN 47
சென்னையிலிருந்து தொலைவு397 கி.மீ (246 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு78 கி.மீ (48 மைல்)
ஈரோட்டிலிருந்து தொலைவு66 கி.மீ (41 மைல்)
இணையதளம்karur

கரூர் (Karur) இந்தியாவின், தமிழகத்திலுள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .

தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் ஆகும். கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.

வரலாறு

[தொகு]
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலின் உட்புறம்

2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர். கரூர், காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

கரூர், பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே, 'வஞ்சி மாநகர்' அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டு, 'கரூர்' என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°57′N 78°05′E / 10.95°N 78.08°E / 10.95; 78.08[1] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் உள்ளது. இந்த நகரம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து 370 கிமீ (230 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றின் கரையில் கரூர் அமைந்துள்ளது. இங்கே உள்ள மண் வகைகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன, இவை காவிரி டெல்டாவில் பொதுவான பயிர்களுக்கு உகந்தவை.

அமைவிடம்

[தொகு]

கரூரானது, தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ. தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 66 கி.மீ. தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ. தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
91.41%
முஸ்லிம்கள்
5.62%
கிறிஸ்தவர்கள்
2.88%
சீக்கியர்கள்
0.01%
பௌத்தர்கள்
0.01%
மற்றவை
0.07%
சமயமில்லாதவர்கள்
0.01%

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கரூரில் 2,34,506 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது, இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கரூரில் இந்துக்கள் 91.41%, முஸ்லிம்கள் 5.62%, கிறிஸ்தவர்கள் 2.88%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, 0.07% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.

போக்குவரத்து

[தொகு]

கரூர், அருகில் உள்ள பெரிய நகரங்களுடன், சாலைகள் வழியாகவும், இருப்புப் பாதைகள் வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இது, பல நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7 மற்றும் எண். 67 கரூர் வழியாகச் செல்கின்றன. மேலும் கரூரில் இருந்து, சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் கேரளா, ஆந்திரா, கருநாடகம் போன்ற அண்டை மற்றும் பிற மாநிலங்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

[தொகு]
மாநகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் வே. செந்தில்பாலாஜி
மக்களவை உறுப்பினர் ஜோதிமணி

கரூர் ஒரு மாநகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநகராட்சி, 48 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, மாநகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிருவகிக்கப்படுகிறது. 338 தெருக்களை உடைய இந்த மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.

கரூர் மாநகராட்சியானது, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவை சேர்ந்த வே. செந்தில்பாலாஜி வென்றார்.

கல்லூரிகள்

[தொகு]

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 அரசு கல்லூரிகளும், 3 மகளிர் கல்லூரிகளும் அடங்கும்.6 பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியும் ஒன்று உள்ளது.

ஆடிப்பெருக்கு விழா

[தொகு]

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, அமராவதி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக அமராவதி நதித் தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, அமராவதி நதித் தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

வானிலை மற்றும் காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், கரூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.1
(88)
33.7
(92.7)
36.2
(97.2)
37.0
(98.6)
37.1
(98.8)
35.6
(96.1)
34.3
(93.7)
34.2
(93.6)
33.9
(93)
32.5
(90.5)
30.7
(87.3)
29.4
(84.9)
33.81
(92.86)
தினசரி சராசரி °C (°F) 25.8
(78.4)
27.5
(81.5)
29.7
(85.5)
31.3
(88.3)
31.5
(88.7)
30.6
(87.1)
29.6
(85.3)
29.4
(84.9)
29.1
(84.4)
28.1
(82.6)
26.6
(79.9)
25.6
(78.1)
28.73
(83.72)
தாழ் சராசரி °C (°F) 20.5
(68.9)
21.3
(70.3)
23.2
(73.8)
25.7
(78.3)
26.0
(78.8)
25.6
(78.1)
24.9
(76.8)
24.6
(76.3)
24.3
(75.7)
23.7
(74.7)
22.5
(72.5)
21.8
(71.2)
23.68
(74.62)
மழைப்பொழிவுmm (inches) 11.5
(0.453)
9.2
(0.362)
8.3
(0.327)
32.4
(1.276)
63.5
(2.5)
17.1
(0.673)
30.2
(1.189)
44.6
(1.756)
63.2
(2.488)
166.3
(6.547)
86.3
(3.398)
61.0
(2.402)
593.6
(23.37)
சராசரி மழை நாட்கள் 2 1 1 3 5 2 3 4 6 10 9 6 52
Source #1: Climate-Data.org[3]
Source #2: மழை நாட்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Location of Karur". Falling Rain Genomics, Inc - Karur. பார்க்கப்பட்ட நாள் 2013-07-07.
  2. "- Karur District;Karur Taluk;Karur (M) Town இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2015-06-08. பார்க்கப்பட்ட நாள் 2009-12-10.
  3. "climate: Karur – Climate graph, Temperature graph, Climate table – Climate-Data.org". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்&oldid=3984689" இலிருந்து மீள்விக்கப்பட்டது