திருப்பூர் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் நாடு
திருப்பூர் மாநகராட்சி
TamilNadu Logo.svg

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி


ஏனைய மாவட்ட்ங்கள் ·  அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு

திருப்பூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், 60 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியும் ஆகும். இது 26.10.2008 அன்று நிறுவப்பட்டது. இதனை மேயர் மற்றும் துணை மேயர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளரால் நிர்வகிக்கபபடுகிறது.

திருப்பூர் மாநகராட்சியுடன் வேலம்பாளையம், தென் நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் தமிழ்நாடு மாநிலத்தின் மிக முக்கியமானத் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது சென்னையில் இருந்து தென்மேற்காக 448 கி.மீ [1] தொலைவில் அமந்துள்ள நகரமாகும். வேலங்கிரி மலையில் இருந்து உருவெடுக்கும் ஆறான நொய்யல் ஆறு இந்நகரின் குறுக்கே பாய்ந்து செல்வது இந்நகரின் சிறப்பம்சம்.

இதன் பரப்பளவு 27.19 ச.கி.மீ,[1]கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள் தொகை 3.51 இலட்சமாகும்[1]. இந்நகரின் பொருளாதாரம் என்பது இந்நகரைச் சுற்றியமைந்துள்ள பருத்தி பொருட்கள், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத்தயாரிப்பாளர்களை சார்ந்து அமைந்துள்ளன.

இப்பகுதியின் வெப்பமான மற்றும் வறட்சியான தட்பவெப்ப சூழல் இம்மாதிரி நிறுவனங்கள் இயங்குவதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகை 963,173 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 489,200, பெண்கள 473,973 ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.19% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 969 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.05%, இசுலாமியர்கள் 10.36%, கிறித்தவர்கள் 3.33% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[2]

மாநகராட்சி[தொகு]

தற்பொழுதய திருப்பூர் மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
60

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]