உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணராயபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணராயபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கிருஷ்ணராயபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் கட்டளை , சிந்தலவாடி மற்றும் பஞ்சப்பட்டி என மூன்று உள்வட்டங்களும், 25 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 119,213 ஆகும். அதில் 59,415 ஆண்களும், 59,798 பெண்களும் உள்ளனர். 31,279 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 84.7% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 70.86% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12603 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 30,533 மற்றும் 64 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 98.89% , இசுலாமியர்கள் 0.52%, கிறித்தவர்கள் 0.55% மற்றும் பிறர் 0.03% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணராயபுரம்_வட்டம்&oldid=2729955" இலிருந்து மீள்விக்கப்பட்டது