இந்தியாவில் தொலைபேசி எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியத் தொலைபேசி எண்கள்
அமைவிடம்
நாடு இந்தியத்
கண்டம் ஆசியா
அணுக்க குறியெண்கள்
நாட்டை அழைக்க +91
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு 00
வெளியூர் முன்னொட்டு 0
அழைப்பு திட்டம்
வகை பொது
ஆரோவில்லில் உள்ள தொலைபேசியகம்

நிலவழி எண்கள்[தொகு]

எஸ்.டி.டி கோடு எனப்படும் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு நகரத்துக்கும், கிராமத்துக்கும் நிலையாக வழங்கப்பட்டிருக்கும். பெரிய நகரங்களுக்கு இரண்டு இலக்க எண்களும், பேரூர்களுக்கு மூன்று இலக்க எண்களும், சிற்றூர்களுக்கு நான்கு இலக்க எண்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.[1]

பெருநகரங்களுக்கான முன்னொட்டு எண்கள்

இரண்டாம் நிலை நகரங்களுக்கான தொலைபேசி முன்னொட்டு எண்கள். இவை மூன்று இலக்கத்தை உடையவை.

லேண்டுலைன் எனப்படும் நிலவழித் தொலைபேசி எண்கள் பத்து இலக்கங்களை கொண்டவை.

நிலவழித் தொலைபேசி எண்களின் முதல் பாகம் அந்த ஊருக்கான எண்ணாகவும், இரண்டாம் பாகம் அந்த தொலைபேசிக்கான எண்ணாகவும் இருக்கும். தொலைபேசிக்கான முதல் இலக்கம் நிறுவனத்தை அடையாளம் காண உதவும். 020-30303030 என்ற எண்ணில், 020 என்பது புனேவையும், 3 என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தையும், மற்ற எண்கள் தொலைபேசியையும் குறிக்கின்றன.

தொலைபேசியின் முதல் எண்

ஒரே ஊரில் இருந்து அவ்வூரில் உள்ள மற்றொரு எண்ணை அழைக்க முன்னொட்டு எண் தேவையில்லை. மற்றொரு ஊரில் உள்ள தொலைபேசியில் இருந்து அழைக்கும்பொழுது, ஊரின் முன்னொட்டு எண்ணையும் சேர்க்க வேண்டும். கைபேசிகளில் இருந்து பேசினால், எண்களுக்கு முன்னர் 0 இட்டு அழைக்க வேண்டும்.

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]