ஒசூர் மாநகராட்சி
ஒசூர் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மேயர் | |
துணை மேயர் | திரு. சி.ஆனந்தய்யா, திமுக 4 மார்ச் 2022 |
மாநகராட்சி ஆணையாளர் | திருமதி. தி.சினேகா இ.ஆ.ப முதல் |
மாவட்ட ஆட்சியர் | திரு. தீபக் ஜேக்கப் இ.ஆ.ப முதல் |
மாநகர சுகாதார அலுவலர் | மரு. அஜிதா முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 45 |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சியினர் (22)
எதிர் கட்சியினர் (17) மற்றவர்கள் (6)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2022 |
கூடும் இடம் | |
ஒசூர் மாநகராட்சி அலுவலகம் | |
வலைத்தளம் | |
https://www.tnurbantree.tn.gov.in/hosur/ |
ஒசூர் மாநகராட்சி (Hosur City Municipal Corporation) இந்தியாவின் தெற்கில் உள்ள தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆகும். ஒசூர் நகராட்சி பிப்ரவரி 13,2019-ஆம் ஆண்டு 13-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒசூர் மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 102.41 கோடி ரூபாய் ஆகும். இம்மாநகராட்சி மத்திகிரி பேரூராட்சி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர், மூக்கண்டப்பள்ளி, சுசுவாடி ஆகிய ஊராட்சிகளை இணைத்து 45 வார்டுகளையும் நான்கு மண்டலங்களையும் கொண்டுள்ளது. தமிழகத்தின் மாவட்ட தலைநகர் அல்லாத முதல் மாநகராட்சி என்கிற பெருமை ஒசூர் மாநகராட்சியையே சேரும். பிப்ரவரி 2022-இல் மாநகராட்சிக்கான முதல் தேர்தல் நடைபெற்றது.[1]
மாநகராட்சி வடிவமைப்பு[தொகு]
ஒசூர் மாநகராட்சி மாமன்றம் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றத்தலைவர் (மேயர்), மாமன்றத் துணைத்தலைவர் (துணை மேயர்), மாமன்றச் செயலாளராக மாநகராட்சி ஆணையாளரைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மாமன்றத்தலைவர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, குறைந்தது மாதத்திற்கு ஒரு முறை மாமன்றக் கூட்டம் கூட்டப்படுகின்றது. இம்மாநகராட்சியினுடைய மாமன்றக் கூட்டம் நடத்தப்படும் நாளில், மொத்தமுள்ள 45 வார்டு உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் (30) வருகை தந்தால் மட்டுமே கூட்டம் நடத்திட முடியும். குறைவான உறுப்பினர்கள் வருகை தந்தால், கூட்டம் மற்றொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்படும். இம்மன்றக் கூட்டத்தில் மாநகருக்குச் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள், தேவைகள் மற்றும் சில செயல்பாடுகள் தீர்மானங்களாகக் கொண்டு வரப்படுகின்றன. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஏற்பின் அடிப்படையில் அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அப்பணிகள், செயல்பாடுகள் அனைத்தும் மாநகராட்சி ஆணையாளர் வழியாகச் செயல்படுத்தப்படுகின்றன.
ஒசூர் மாநகராட்சி[தொகு]
பரப்பளவு | |||
---|---|---|---|
72.43 ச. கிமீ | |||
மக்கள் தொகை | |||
2022 கணக்கெடுப்பின்படி | 3,45,000 | ||
மாநகராட்சி மண்டலங்கள் | |||
கிழக்கு மண்டலம் | மேற்கு மண்டலம் | தெற்கு மண்டலம் | வடக்கு மண்டலம் |
மாநகராட்சி வட்டங்கள் | |||
45 வட்டங்கள் | |||
இம்மன்றத்திற்காக அமைக்கப்பெற்ற நிலைக்குழுக்கள் | |||
வரி மற்றும் நிதிக் குழு | |||
பணிக்குழு | |||
திட்டக் குழு | |||
நல்வாழ்வுக் குழு | |||
கல்விக் குழு | |||
கணக்கிடுதல் குழு |
ஒசூர் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (HMCC)[தொகு]
ஒசூர் மாநகரை நிர்வகிக்க ஒசூர் பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒசூர் மாநகரின் குடிநீர், சுகாதாரம், கல்வி, பொது சேவைகள், பொது சொத்துக்கள் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். இந்த குழுமம் பெருநகரங்களில் மட்டுமே அமைக்கப்படும். அதனடிப்படையில் தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சியிலும் உள்ளது. இந்த அமைப்பு சேலம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகளிலும் கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி உறுப்பினர்கள்[தொகு]
ஆணையர் | மேயர் | துணை மேயர் | மாநகராட்சி உறுப்பினர்கள் |
---|---|---|---|
திருமதி . தி.சினேகா | திரு. எஸ். ஏ. சத்யா | திரு. ஆனந்தையா | 45 |