அரவக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி
இருப்பிடம்: அரவக்குறிச்சி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°46′N 77°55′E / 10.77°N 77.92°E / 10.77; 77.92ஆள்கூறுகள்: 10°46′N 77°55′E / 10.77°N 77.92°E / 10.77; 77.92
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் அரவக்குறிச்சி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் T. அன்பழகன், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,412 (2011)

621/km2 (1,608/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/aravakurichi

அரவக்குறிச்சி (ஆங்கிலம்:Aravakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்[தொகு]

அரவக்குறிச்சி பேரூராட்சியின் கிழக்கில் திருச்சிராப்பள்ளி 110 கிமீ, மேற்கில் ஈரோடு 60 கிமீ, வடக்கில் கரூர் 30 கிமீ; தெற்கில் திண்டுக்கல் 45 கிமீ தொலைவில் உள்ளது.

சிறப்பு[தொகு]

இந்தியாவிலேயே அரவக்குறிச்சி முருங்கைக்காய் முக்கிய சந்தையாகும்.

மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, ராஜஸ்தான், ஹரியாணா, மேற்குவங்கம், ஒரிசா, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான முருங்கைக்காய் சுமை ஏற்றப்பட்டு, அரவக்குறிச்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அரவக்குறிச்சி பகுதி முருங்கைக்காய் சுவைக்காக புகழ் பெற்று, விளை பொருட்களை வாங்க வரும் வர்த்தகர்களை ஈர்க்கிறது. இப்பகுதியில், 40,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்படுகிறது

அரவக்குறிச்சிக்கு இன்னொரு சிறப்பு அருகே சேவல்சண்டை ஏறக்குறைய பல நூற்றாண்டுகளாக பூலாம்வலாசு மற்றும் கோவிலூர் நடைபெறுகிறது. பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் கரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், அண்டை கேரளாவில் உள்ள சில இடங்களிலிருந்தும். வருகை தருகின்றனர்.

வரலாறு[தொகு]

மைசூர் மன்னர் நஞ்சராஜா தளபதியாக இருந்தவர் ஐதர்அலி. 1782ல் வந்தவாசியில் நடந்த இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேய படைகளை எதிர்த்து போரிட்டு இறந்த பிறகு அவர் மகன் திப்பு சுல்தான் மைசூர் மன்னரானார். அவர் காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு இணையாக அரவக்குறிச்சியில் வலுவான கோட்டை ஒன்று உருவாக்கப்பட்டது.


இடையகோட்டை, தாராபுரம், ராயனூர், பாலக்காடு, சத்தியமங்கலம், கோவை உள்ளிட்ட இடங்களை இணைத்து அரவக்குறிச்சி கோட்டை தலைமையிடமாக மாற்றப்பட்டது. அரவக்குறிச்சி கோட்டைக்கு நிர்வாக பொறுப்பாளராக திப்புசுல்தானின் தாய்மாமா சையதுசாயபு, போர் படை தளபதியாக பத்ரூல் ஜமான்கான் நியமிக்கப்பட்டனர். கடந்த 1784ல் பேடனூரை கைப்பற்ற திண்டுக்கல், அரவக்குறிச்சி படைகளுடன் திப்புசுல்தான் சென்றார். இதையறிந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் திருச்சி தளபதி கர்னல் லாங்கிடம் திண்டுக்கல், அரவக்குறிச்சி கோட்டையை கைப்பற்ற உத்தரவிட்டார். 200க்கும் மேற்பட்ட ஆங்கிலேய படையினர் திருச்சியிலிருந்து கரூர், ராயனூர் வழியாக அரவக்குறிச்சி, திண்டுக்கல்லை தாக்குவதற்கு கிளம்பினர். ஆற்காடு நவாப் முகமது அலியின் போர் தளபதி புஷி மூலமாக ரகசிய தகவலை அறிந்த சையது சாயபு தாராபுரத்தில் பதுங்கினார்.

அரவக்குறிச்சியை அடைந்த ஆங்கிலேய படையினர் கோட்டையை நாலாபுறத்திலிருந்தும் தாக்கினர். கோட்டையின் உள்ளிருந்து தளபதி பத்ரூல் ஜமான்கான் தலைமையில் கடுமையான எதிர்தாக்குதல் நடந்தது.

ஏழு நாள் நடந்த போரின் முடிவில் ஆங்கிலேய படை வென்றாலும், 80 வீரர்களை இழக்க வேண்டியிருந்தது. போர் முடிவில் ஆங்கிலேய தளபதி கோட்டைக்குள் பார்த்தபோது ஏழு பேர் மட்டுமே இறந்தது கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தளபதி பத்ரூல் ஜமான்கான் உள்ளிட்ட ஏழு பேர் மட்டுமே ஏழு நாட்கள் தாக்குப்பிடித்து 200 பேர் கொண்ட ஆங்கிலேய படையை கலங்கடித்தது கண்டு ஆச்சரியமடைந்தனர்.

"தி டைகர் ஆஃப் மைசூர்' என்ற புத்தகத்தில் ஏழு பேர் மட்டுமே ஏழு நாள் புரிந்த போர் முறை குறித்து எஸ்.ஆர்., சௌத்திரி குறிப்பிட்டுள்ளார். அரவக்குறிச்சியை மீண்டும் கைப்பற்றிய திப்புசுல்தான், 1,799 வரை அவர் ஆளுகையில் வைத்திருந்தார். 1,788ல் சையது சாயபு இறந்ததும், அவர் நினைவாகவும், போரில் இறந்த தளபதி பத்ரூல் ஜமான்கான் நினைவாகவும் 1,798ல் நினைவிடம் அமைத்தார். "சையது பாவா தர்ஹா' என அழைக்கப்படும் இந்த நினைவிடம் இன்றுவரை பராமரிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ் மாநில மத நல்லிணக்க பேரவை தலைவர் காஜா ஷெரீப் கூறியதாவது: போர் அரவம் தொடர்ந்து கேட்டதால் அரவக்குறிச்சி என்று இவ்விடம் பெயர்பெற்றது. இப்பகுதியில் சிதிலமடைந்த கோட்டை இருந்த பகுதியில் தொல்பொருள் துறையினர் ஆய்வு நடத்தினால் திப்புசுல்தான் காலம் குறித்து பல அரிய தகவல்கள் கிடைக்கக்கூடும். தீரன் சின்னமலையுடன் இணை ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வரலாற்று விபரமும் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=34695&Print=1


பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,562 வீடுகளும், 12,412 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

அரசு அலுவலகங்கள்[தொகு]

 • வட்டாச்சியர் அலுவலகம்
 • டவுன் பஞ்சாயத் அலுவலகம்
 • ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
 • உதவி தொடக்க கல்வி அலுவலகம்
 • அரசு கருவூலம்

காவல் நிலையம்[தொகு]

 • துணை கண்காணிப்பாளர் நிலையம்
 • காவல் நிலையம்

தீயணைப்பு நிலையம்[தொகு]

தீயணைப்பு நிலையம்

மருத்துவமனைகள்[தொகு]

 • அரசு மருத்துவமனை
 • கால்நடை மருத்துவமனை

பள்ளிக்கூடங்கள்[தொகு]

 • அரசினர் மேல்நிலை பள்ளி
 • அரசினர் பெண்கள் உயர் நிலை பள்ளி
 • பி.எஸ்.பி. மேல்நிலைப் பள்ளி
 • ஆறுமுகம் மேல்நிலைப் பள்ளி
 • ஆர்.சி. நடுநிலைப் பள்ளி
 • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

வங்கிகள்[தொகு]

பள்ளிவாசல்கள்[தொகு]

 • ஜும்மா மஸ்ஜித் பெரிய பள்ளி
 • மஸ்ஜிதுல் அப்ரார் சின்ன பள்ளி

தர்காக்கள்[தொகு]

 • காயலா பாவா தர்கா
 • முத்து பாவா தர்கா
 • கரீம் பாவா தர்கா
 • சையது பாவா தர்கா
 • மலையாளதம்மா தர்கா

கோவில்கள்[தொகு]

 • பாலசுப்ரமண்யர் கோவில்
 • மாரியம்மன் கோவில்
 • காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்
 • பிள்ளையார் கோவில்
 • செல்லாண்டியம்மன் கோவில்
 • பகவதியம்மன் கோவில்

அரவக்குறிச்சி காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்[தொகு]

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒன்றான நல்காசி என்ற நங்காஞ்சி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியிருக்கும் ஒரே சிவாலயம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருள்மிகு காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலயம்.

இவ்வாலயத்தின் மூலவர் புண்ணிய லிங்கமான பாண லிங்கம்.இவ்வாலயத்திற்கு வந்து சிவனை தரிசித்தால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் .

700 ஆண்டுகளுக்கு முன் சேரமன்னர் திருபுவன சக்கரவர்த்தியால் நிர்மாணம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .

1974 ஆம் ஆண்டு திருப்பணி திருப்பணி வேலைகள் நடந்தன . 1979 ஆம் ஆண்டு

புயல் மற்றும் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்து விட்டது . பிறகு 1995-96 ஆம் ஆண்டில் திருப்பணி தொடங்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்று 2003 ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்று சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.

காசிக்கு செல்லமுடியாத அன்பர்கள் இங்குவந்து சிவனை தரிசித்து புண்ணியத்தை பெற வாழ்த்துகிறோம் .

கரூரிலிருந்து திண்டுக்கல் திண்டுக்கல் செல்லும் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .

மொடக்கூர் மேல்பாகம் மெய்பொருள் நாதசுவாமி கோயில்[தொகு]

கோவிலூர் 11 ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர் ராஜராஜ கரிகால சோழனால் கட்டப்பட்டதாக கல்வெட்டு விவரம் உள்ளது . இன்னும் பல கல்வெட்டுகள் உள்ளன. திருமணம் ஆகாத பெண்கள் தீபம் ஏற்று வழிபட்டால் திருமணம் கூடி வரும். சிறந்த சிற்பக்கலையுடன் உள்ளது

இறைவன் : அருள்மிகு மெய்ப்பொருள்நாதசாமி

இறைவி: அருள்மிகு சௌந்திர நாயகி , அருள்மிகு நல்லமங்கை , சத்தியவாகீஸ்வரி

சித்திரை தேர் திருவிழா சிறப்புடையதாகும் .

வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்[தொகு]

1200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயில் 5 அடுக்கு ராஜகோபுரம் உள்ளது.

வெஞ்சன் என்ற வேடுவ அரசன் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும் இத்தலம் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது

தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலும் ஒன்று. சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அருணகிரிநாதரின் திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.

இறைவன் : அருள்மிகு கல்யாணவிகிர்தேஸ்வரர்

இறைவி: அருள்மிகு விகிர்தேஸ்வரி, விகிர்தநாயகி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை

மாசி தேர் திருவிழா சிறப்புடையதாகும்

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


புங்கம்பாடி சொக்கநாதசுவாமி கோயில்[தொகு]

புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது  என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதை கோட்டை என்றே அழைக்கிறார்கள்.

1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.

தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பிரதோஷம்,தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது.

ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றது .ஆய்வு முழுவதும் நிறைவு பெற்றதும் புங்கம்பாடி கிராமம் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் முழு வரலாறு கிடைக்கப்பெறும்.


(மலைக்கோவிலூர்) நாகம்பள்ளி மகாபலேஸ்வரர் சுவாமி கோயில்[தொகு]

மலைக்கோவில் இங்குள்ளதாலேயே ஊர்ப்பெயரும் மலைக்கோயிலூர் என அமைந்தது. ஒரு சிறிய குன்றுப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். கற்றளிக்கோயில். கொங்குச் சோழர் காலத்தது. கொங்குச் சோழர் மற்றும் கொங்குப் பாண்டியர் கல்வெட்டுகள் இங்குள்ளன.

இக்கோயில் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உரிய பேணுதல் இன்றிச் சிதைவுற்றுள்ளது. வாரம் ஒரு முறை, இந்தப்பகுதியில் உள்ள வெஞ்சமாங்கூடல் கோயிலின் பூசையாளர் வந்து நடை திறந்து பூசை செய்துவிட்டுப் போகும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. சிவலிங்கத்திருமேனியாக இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியன எப்போதும் பூட்டப்பெற்றிருந்தாலும் கோயில் வளாகம் முற்றும் நாள் முழுதும் எவரும் வந்து போகும் வகையில் உரிய பாதுகாப்பின்றிக் கிடக்கின்றது.

கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும் கல்வெட்டுச் சான்றுகளால் பெறப்படுகிறது.  

கொங்குச் சோழன் வீரராசேந்திரன்

கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207-1256. இவன் தன் ஆட்சிக்காலத்தில், தென் கொங்கில் 1207 முதல் 1221 வரையிலும், பின்னர் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து 1256 வரையிலும் ஆட்சி செய்துள்ளான். நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த அரசன் இவன் ஒருவனே. இக்கோயிலில் கிடைக்கும் இவ்னது கல்வெட்டுகள், இவனுடைய 14-ஆம் ஆட்சியாண்டில் ஒன்று, 18-ஆம் ஆட்சியாண்டில் இரண்டு என அமைகின்றன. 14-ஆம் ஆட்சியாண்டு, கி.பி. 1221 ஆகும். எனவே, கோயிலின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதும், கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும் கல்வெட்டுச் சான்றுகளால் பெறப்படுகிறது.  


இறைவன்:மகாபலேஸ்வரர்

இறைவி:மரகதவல்லி

தேவாலயங்கள்[தொகு]

ஆர்.சி. சர்ச் சி.எஸ்.ஐ. சர்ச்

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]


 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. அரவாக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
 5. Aravakurichi Population Census 2011
 6. [https://indikosh.com/city/688654/aravakurichi Aravakurichi Town Panchayat]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவக்குறிச்சி&oldid=2853464" இருந்து மீள்விக்கப்பட்டது