கரூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் - வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, விராலி மலை.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டன. புதிதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும். கரூர் மக்களவைத் தொகுதியின் பழைய சட்டமன்றத் தொகுதிகள் - அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம்.

இங்கு வென்றவர்கள்[தொகு]

இதுவரை நடந்துள்ள 13 தேர்தல்களில் 6 முறை காங்கிரசும், 4 முறை அதிமுகாவும், திமுகாவும், தமாகாவும் தலா ஒரு முறை வென்று உள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

 • 1957 - பெரியசாமி கவுண்டர் - காங்கிரசு.
 • 1962 - ராமநாதன் செட்டியார் - காங்கிரசு.
 • 1967 - முத்துச்சாமி கவுண்டர் - சுதந்திரா கட்சி.
 • 1971 - கே. கோபால் - காங்கிரசு.
 • 1977 - கே. கோபால் - காங்கிரசு.
 • 1980 - துபை செபாஸ்டியன் (காங்கிரசு)
 • 1984 - ஏ.ஆர். முருகையா (காங்கிரசு)
 • 1989 - தம்பித்துரை (அதிமுக)
 • 1991 - என். முருகேசன் (அதிமுக)
 • 1996 - கே. நாட்ராயன் (தமாகா)
 • 1998 - தம்பித்துரை (அதிமுக)
 • 1999 - எம். சின்னச்சாமி (அதிமுக)
 • 2004 - கே.சி. பழனிச்சாமி (திமுக)
 • 2009 - எம். தம்பித்துரை (அதிமுக)
 • 2014 - எம். தம்பித்துரை (அதிமுக)

14வது மக்களவை[தொகு]

கே.சி.பழனிச்சாமி (திமுக) – 4,50,407.

ராஜா பழனிச்சாமி (அதிமுக) – 2,59,531.

வெற்றி வேறுபாடு - 1,90,876 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

38 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் எம். தம்பித்துரை திமுகவின் கே.சி. பழனிச்சாமியை 47,254 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். தம்பித்துரை அதிமுக 3,80,542
கே.சி. பழனிச்சாமி திமுக 3,33,288
ஆர். இராமநாதன் தேமுதிக 51,196
ஆர். நடராசன் கொமுபே 14,269
ஆர். தர்மலிங்கம் பகுஜன் சமாஜ் கட்சி 5,413

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி கூட்டணி
எம். தம்பித்துரை அதிமுக 5,40,722
சின்னசாமி திமுக 3,45,475
என்.எஸ்.கிருஷ்ணன் தே.மு.தி.க 76,560
ஜோதிமணி காங் 30,459

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
81.46% 80.47% 0.99%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
 2. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]