தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றன. அதே போன்று நாகை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளாகும்.

மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்

பழனி மாணிக்கம் 2004ல் இருந்து இந்திய அரசில் நிதித்துறை இணை அமைச்சராக உள்ளார்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் பழனிமாணிக்கம் மதிமுகவின் துரை பாலகிருட்டினனை 101,787 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பழனிமாணிக்கம் திமுக 4,08,343
துரை பாலகிருட்டினன் மதிமுக 3,06,556
பி. இராமநாதன் தேமுதிக 63,852
எசு. சரவணன் பகுஜன் சமாஜ் கட்சி 5,811
முருகராஜ் சுயேச்சை 9,805

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி கூட்டணி
த. ரா. பாலு திமுக திமுக
கு.பரசுராமன் அதிமுக அதிமுக

வெளியிணைப்புகள்[தொகு]