நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
![]() நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1952-நடப்பு |
---|---|
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
தற்போதைய மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 982,352[1] |
அதிகமுறை வென்ற கட்சி | கம்யூனிஸ்டுக் கட்சி (6 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 160. சீர்காழி (SC) 161. மயிலாடுதுறை 162. பூம்புகார் 170. திருவிடைமருதூர் (SC) 171. கும்பகோணம் 172. பாபநாசம் |
-->
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. ஆரம்ப காலத்தில் இந்தத் தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது. பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது.
பொருளடக்கம்
தொகுதி மறுசீரமைப்பு[தொகு]
நாகை மக்களவைத் தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர்கள்[தொகு]
நாகை பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
- 1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரசு
- 1962 - கோபால்சாமி - காங்கிரசு
- 1967 - சாம்பசிவம் - காங்கிரசு
- 1971 - காத்தமுத்து - சிபிஐ
- 1977 - எசு.ஜி. முருகையன் - சிபிஐ
- 1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக
- 1984 - மகாலிங்கம் - அதிமுக
- 1989 - செல்வராசு - சிபிஐ
- 1991 - பத்மா - காங்கிரசு
- 1996 - செல்வராசு - சிபிஐ
- 1998 - செல்வராசு - சிபிஐ
- 1999 - ஏ. கே. எஸ். விஜயன் - திமுக
- 2004 - ஏ. கே. எஸ். விஜயன் - திமுக
- 2009 - ஏ. கே. எஸ். விஜயன் - திமுக
- 2014 - கோபால் - அதிமுக
- 2019 - செல்வராஜ் - சிபிஐ
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
7 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஏ. கே. எஸ். விஜயன் இந்திய பொதுவுடமைக் கட்சியின் எம். செல்வராசை 47,962 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஏ. கே. எஸ். விஜயன் | திமுக | 3,69,915 |
எம். செல்வராசு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3,21,953 |
எம். முத்துக்குமார் | தேமுதிக | 51,376 |
ஜி. வீரமுத்து | பகுஜன் சமாஜ் கட்சி | 5,123 |
பி. வீராசாமி | சுயேச்சை | 8,769 |
16வது மக்களவைத் தேர்தல்[தொகு]
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆர்.கோபால் | அதிமுக | 4,34,174 |
ஏ. கே. எஸ். விஜயன் | திமுக | 3,28,095 |
வடிவேல் ராவணன் | பா.ம.க | 43,506 |
செந்தில் பாண்டியன் | காங் | 23,967 |
வாக்குப்பதிவு[தொகு]
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
77.71% | 77.64% | ↓ 0.07% |
தேர்தல் முடிவு[தொகு]
17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]
வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,02,208[4] |
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
இந்த தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 8 வேட்பாளர் கட்சி சார்பாகவும், 7 வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[5] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
![]() |
அணிதா | பகுஜன் சமாஜ் கட்சி | 5,412 | 0.54% | |
![]() |
சரவணன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3,11,539 | 31.09% | |
செல்வராஜ் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 5,22,892 | 52.17% | 2,11,353 | |
அம்பிகாபதி | மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி | 2,906 | 0.29% | ||
![]() |
குருவய்யா | மக்கள் நீதி மய்யம் | 14,503 | 1.45% | |
![]() |
மாலதி | நாம் தமிழர் கட்சி | 51,448 | 5.13% | |
வேதரத்தினம் | Anti Corruption Dynamic Party | 895 | 0.09% | ||
ஜெயலெட்சுமி | தமிழ்நாடு இளைஞர் கட்சி | 1,178 | 0.12% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- ↑ "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
- ↑ "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 12 August 2019.
- ↑ "List of CANDIDATE OF nagapattinam Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 12/05/2019.