நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்னிலம், திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 283 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 159 பேரும், இதர வாக்காளர்கள் 24 பேரும் உள்ளனர்

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜ் மற்றும் திமுக சார்பில் ஜோதிராமன் நிறுத்தப்பட்டுள்ளனர். நன்னிலம் தொகுதியில் நன்னிலம், வலங்கைமான் மற்றும் பேரளம் என 3 பேரூராட்சிகளும், 147 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன.

ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சரஸ்வதி கோவில், ஷ்ரீவாஞ்சியம் எமதர்மராஜா கோயில் உள்ளது. மேலும் நவக்கிரகத் தலங்களில் ஒன்றான ஆலங்குடி குருபகவானும், ராகு- கேது தலமாக விளங்கும் திருப்பாப்புரமும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது.

இத்தொகுதி முப்போகம் விளையும் பூமியாக உள்ளது. தவிர பருத்தி, நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. [1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

பரவாக்கரை,வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள்[2].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 ஆர். காமராஜ் அதிமுக 1,00,918 49.43%
2011 ஆர். காமராஜ் அதிமுக 55.04%
2006 பத்மாவதி இகம் 55.04%
2001 C.K.தமிழரசன் தமாகா 46.11%
1996 பத்மா தமாகா 61.37%
1991 K.கோபால் அதிமுக 56.79%
1989 M.மணிமாறன் திமுக 45.08%
1984 M.மணிமாறன் திமுக 51.72%
1980 A.கலையரசன் அதிமுக 52.73%
1977 M.மணிமாறன் திமுக 41.75%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,28,564 1,24,832 1 2,53,397

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 14

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 80.57% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
2,04,,154 % % % 80.57%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2,182 1.07%[4]

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]