கடலூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடலூர் மாவட்டம்
மாவட்டம்
அடைபெயர்(கள்): கடலூர்
TN Districts Kadalur.gif
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகர் கடலூர்
வட்டங்கள் சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாச்சலம்
அரசு
 • மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்

கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் ஒன்றாகும். கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரமாகும். சோழர் கால வரலாற்று புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

எல்லைகள்[தொகு]

தெற்கே அரியலூர் மாவட்டமும் தென்கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, தென் ஆற்காடு வள்ளளார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என இரு மாவட்டங்களா உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

புவியியல்[தொகு]

ஆறுகள்[தொகு]

கெடிலம் ஆறு, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு (வெள்ளாறு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அணைக்கட்டுகள்[தொகு]

திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணை கள் அமைந்துள்ளன.

அலையாத்திக் காடுகள்[தொகு]

பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன.

நிர்வாகம்[தொகு]

கடலூர் மாவட்ட வட்டங்கள்

வட்டங்கள்[தொகு]

கடலூர் மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

 1. கடலூர்
 2. பண்ருட்டி
 3. விருத்தாச்சலம்
 4. சிதம்பரம்
 5. காட்டுமன்னார்கோயில்
 6. திட்டக்குடி
 7. குறிஞ்சிப்பாடி
 8. வேப்பூர்
கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்[தொகு]

உலக தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இங்கே உள்ளன.

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

 1. கடலூர்
 2. அண்ணாகிராமம்
 3. பண்ருட்டி
 4. குறிஞ்சிப்பாடி
 5. கம்மாபுரம்
 6. விருத்தாச்சலம்
 7. நல்லூர்
 8. மங்கலூர்
 9. மேல்புவனகிரி
 10. பரங்கிப் பேட்டை (போர்ட்டா நோவா)
 11. கீரப்பாளையம்
 12. குமராட்சி
 13. காட்டுமன்னார்கோயில்

தொழில்வளம்[தொகு]

மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. என். எல். சி. என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்க்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கரும்பு இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. அதன் காரணமாக இங்கு இரண்டு சர்க்கரை ஆலைகளும் உள்ளன.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (கி.பி.1110ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது), பிச்சாவரம், கெடிலம் ஆற்றின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில், மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், திருக்கண்டேஸ்வரம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் நடனபாதேஸ்வரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆறு கரம் கொண்ட பைரவர் தி௫க்கோயில், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மா.ஆதணூர் கிராமத்தில் திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது, திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

மத்திய சிறைச்சாலை[தொகு]

முதன்மைக் கட்டுரை: கடலூர் மத்திய சிறைச்சாலை

கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

 1. திட்டக்குடி (தனி)
 2. விருத்தாச்சலம்
 3. நெய்வேலி
 4. பண்ருட்டி
 5. கடலூர்
 6. குறிஞ்சிப்பாடி
 7. புவனகிரி
 8. சிதம்பரம்
 9. காட்டுமன்னார்கோயில் (தனி)

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_மாவட்டம்&oldid=2553830" இருந்து மீள்விக்கப்பட்டது