அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)
அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
இத்தொகுதியில் படித்தவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கு பேசக்கூடிய நாயுடு சமுதாயத்தினர் 35 சதவீதம் பேர் உள்ள்னர். தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய பகுதிகளும் அதிகம் இத்தொகுதியில் உள்ளன.
அமைந்தகரை, அரும்பாக்கம், டி.பி.சத்திரம், எம்.எம்.டி.ஏ. காலனி, செனாய் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இதில் அடங்கும். அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், டி.பி.சத்திரம், நடுவங்கரை, எம்.ஜி.ஆர்.காலனி என்.எஸ்.கே.நகர், பொன்வேல் பிள்ளை தோட்டம், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகளில் குடிசைவாசி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,86,019. அதில் ஆண் வாக்காளர்கள் 1,40,410 மற்றும் பெண்கள் வாக்காளர்கள் 1,45,522 அகவுள்ளனர். அதிமுக சார்பில் கோகுல இந்திரா, திமுக சார்பில் எம்.கே. மோகன், அ.ம.மு.க.சார்பில் குணசேகரன், மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சி சங்கர், பகுஜன் சமாஜ் கட்சி ஜீவித் குமார் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | மு. கருணாநிதி | திமுக | 43,076 | 50 | கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 26,638 | 31 |
1980 | மு. கருணாநிதி | திமுக | 51,290 | 49 | எச். ஹண்டே | அதிமுக | 50,591 | 48 |
1984 | எஸ். எம். இராமச்சந்திரன் | திமுக | 65,341 | 52 | ராதாகிருஷ்ணன் | அதிமுக | 55,972 | 45 |
1989 | க. அன்பழகன் | திமுக | 71,401 | 49 | சுகுமார் பாபு | அதிமுக(ஜெ) | 38,994 | 27 |
1991 | ஏ. செல்லகுமார் | இ.தே.காங்கிரசு | 75,512 | 57 | இராமச்சந்திரன் | திமுக | 48,214 | 36 |
1996 | ஆற்காடு வீராசாமி | திமுக | 103,819 | 66 | பாலசுப்ரமணியன் | இ.தே.காங்கிரசு | 34,802 | 22 |
2001 | ஆற்காடு வீராசாமி | திமுக | 77,353 | 48 | ஆறுமுகம் | பாமக | 71,775 | 45 |
2006 | ஆற்காடு வீராசாமி | திமுக | 100,099 | 46 | விஜயா தாயன்பன் | மதிமுக | 87,709 | 40 |
2011 | சு. கோகுல இந்திரா | அதிமுக | 88,954 | 58.67 | வி. கே. அறிவழகன் | காங்கிரஸ் | 52,364 | 34.54 |
2016 | எம். கே. மோகன் | திமுக | 72,207 | 42.74 | சு. கோகுல இந்திரா | அதிமுக | 70,520 | 41.74 |
2021[2] | எம். கே. மோகன் | திமுக | 80,054 | 48.49 | எஸ். கோகுல இந்திரா | அதிமுக | 52,609 | 31.87 |
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
4048 | % |