ஆற்காடு வீராசாமி
ஆற்காடு நா. வீராசாமி | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 21, 1931 குப்புடிச்சாத்தம், ஆற்காடு வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆற்காடு நா. வீராசாமி, (ஆங்கிலம் Arcot N. Veeraswami) என்பவர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கித்தவர் ஆவார். திமுகவின் பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார்.[1]. தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் 2001 முதல் 2005 வரை பணியாற்றியுள்ளார் . மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள குப்புடிச்சாத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1931ஆம் ஆண்டு பிறந்தார். 1967, 1971இல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1996, 2001 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1977 மற்றும் 1988 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.இதற்கிடையில், சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றிய அவர், 1984 ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அப்போது அதிமுகவின் பிரச்சார செயலாளராக இருந்த ஜெ. ஜெயலலிதா விடம் தோல்வியடைந்தார்.[2] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை.[3][4]
ஆண்டு | சட்டமன்றத் தொகுதி | முடிவு |
---|---|---|
1967 | ஆற்காடு | வெற்றி |
1971 | ஆற்காடு | வெற்றி |
1977 | சட்ட மேலவை | வெற்றி |
1984 | ராஜ்ய சபை | தாேல்வி |
1984 | சட்ட மேலவை | வெற்றி |
1989 | புரசைவாக்கம் | வெற்றி |
1996 | அண்ணாநகர் | வெற்றி |
2001 | அண்ணாநகர் | வெற்றி |
2006 | அண்ணாநகர் | வெற்றி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வட சென்னை யாருக்கு ? – திமுக – தேமுதிக நேரடி போட்டியா? – சிறப்பு தொகுப்பு. https://www.sathiyam.tv/.+18/03/2019 . Archived from the original on 2020-03-02. https://web.archive.org/web/20200302120053/https://www.sathiyam.tv/who-will-win-north-chennai-dmk-or-dmdk/. பார்த்த நாள்: 2020-07-25. "இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆற்காடு வீரசாமி மகன் கலாநிதி வீராசாமி போட்டியிடுவதால் திமுக விற்கு வெற்றி வாய்ப்பு திமுக பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் ஆற்காடு வீராசாமி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் கட்சி பணிகளிலிருந்து பெரிய அளவில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கிறார்."
- ↑ https://www.vikatan.com//article.php?module=magazine&aid=37042
- ↑ "டெக்கான் குரோனிக்கல் கருணாநிதி ஆற்காட்டார் தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு". 2018-01-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ எக்கனாமிக் டைம்சு செய்தி
- 1937 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- வேலூர் மாவட்ட மக்கள்
- 4 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 5 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்