மதுரை மேற்கு, மதுரை மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்ற தொகுதி ஆகும்.இத்தொகுதியில் மதுரை மாநகராட்சியின் 60 முதல் 72 வரையிலான 13 வார்டுகள் மற்றும் கோவில் பாப்பாகுடி, பரவை, விளாங்குடி, கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், அச்சம்பத்து, காளவாசல், பழங்காநத்தம், ஜெய்ஹிந்துபுரம் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும்.
மதுரை மேற்கு தொகுதியில் முக்குலத்தோர், பிள்ளைமார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செட்டியார், யாதவர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் முக்குலத்தோர் 30 சதவீதம் பேரும், பிள்ளைமார் சமூகத்தினர் 15 சதவீதம் பேரும் உள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதியில் விவசாயம், கைத்தறி நெசவு, சிறு குறு வணிகம் ஆகியவை முக்கிய தொழில்கள் ஆகும். இவைதான் அங்கு வசிக்கும் மக்களுக்கு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. மதுரை மேற்கு தொகுதியில் குறிப்பிடத் தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது. இந்த தொகுதியில் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றி தரப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
[1]
மதுரை தெற்கு வட்டம் (பகுதிகள்) கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், கீழ்மதிகாட்டினான், துவரிமான், அச்சம்பத்து, ஏற்குடி, சம்பக்குடி மற்றும் புதுக்குளம் கிராமங்கள்.