மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மதுரை தெற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் 2,24675 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,13,990 பேர் பெண்கள். 1,10,615 பேர் ஆண்கள். 20 பேர் மூன்றாம் பாலினத்தவர்.[1]
வரலாறு[தொகு]
இந்த தொகுதி முதலில் 1951ஆம் ஆண்டு மதுரை கிழக்குத் தொகுதி எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது மதுரை தெற்கு தொகுதி என மாற்றப்பட்டது. இந்த தொகுதி முற்றிலும் மதுரை நகரப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது. அதாவது பழைய மதுரை கிழக்கு தொகுதியாக இருந்த பகுதிகளான வைகை வடகரையில் உள்ள ஆழ்வார்புரம், செல்லூர், செனாய்நகர் போன்ற பகுதிகளை உள்ளட்டக்கிய புதிய தெற்கு சட்டமன்றத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011-ல் நடைபெற்ற சட்டமனறத் தேர்தலில் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் ஆர். எம். சி. அண்ணாதுரை வெற்றி பெற்று மதுரை தெற்கு தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
தொகுதிக்குட்பட்ட பகுதிகள்[தொகு]
மதுரை மாநகராட்சியின் 9, 10, 16, 19, 39, 43 முதல் 59 வரையிலான வார்டுகள் மதுரை தெற்கு தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இவற்றில் முனிச்சாலை, லெட்சுமிபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ஓலைப்பட்டினம், சீனிவாசப்பெருமாள் கோயில் பகுதிகள், கொண்டித்தொழு தெருக்கள், பங்கஜம் காலனி, தெப்பக்குளம், கீழவாசல், காமராஜர்புரம், சிந்தாமணி, வாழைத்தோப்பு, பாலரெங்காபுரம், பழைய குயவர் பாளையம், செல்லூர், மதிச்சியம், வில்லாபுரம், தெப்பக்குளம், ஆழ்வார்புரம், செல்லூர், செனாய்நகர் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும்.[2][3].
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011 | ஆர். அண்ணா துரை | இபொக (மா) | 83441 | எஸ். பி. வரதராஜன் | காங்கிரசு | 37990 | 45451 |
2016 | எஸ். எஸ். சரவணன்[4][2] | அதிமுக | 62683 | எம். பாலசந்திரன் | திமுக | 38920 | 23763 |
2021 | மு. பூமிநாதன் | மதிமுக | 62,812 | எஸ். எஸ். சரவணன் | அதிமுக | 56,297 | 6,515 |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,08,417 | 1,10,800 | 6 | 2,19,223 |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2918 | % |
முடிவுகள்[தொகு]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ். எஸ். சரவணன் 62,683 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மதுரை தெற்கு தொகுதி, 2021 சட்டமன்றத் தேர்தல் கண்ணோட்டம்
- ↑ 2.0 2.1 "மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி". 2017-10-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 பிப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 9 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.