ஆர். அண்ணா துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். அண்ணாதுரை ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராவார்.

ஆர். அண்ணாதுரை ஜனநாயகக் கட்சி இளைஞர் கூட்டமைப்பில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் பத்து வருடங்களாக ஜனநாயகக் கட்சி இளைஞர் கூட்டமைப்பில் மாவட்டக் குழுவின் தலைவர் இருந்துள்ளார். பின்னர் 2008 ஆம் ஆண்டு  மதுரை (நகர்ப்புற) மாவட்டக் குழுவின் செயலாளராக இருந்தார். பல்வேறு போராட்டங்கள் தொடர்பாக ஆர். அண்ணாதுரை பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். [1]

2011ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிட்டு 83,441 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamilnadu: Profile of Candidates". Communist Party of India (Marxist) (21 April 2017). பார்த்த நாள் 2017-04-27.
  2. "DMK receives drubbing in southern districts". The Hindu. 14 May 2011. Archived from the original on 2011-09-28. https://web.archive.org/web/20110928013650/http://www.thehindu.com/news/cities/Madurai/article2016590.ece?service=mobile. பார்த்த நாள்: 2017-04-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அண்ணா_துரை&oldid=3233077" இருந்து மீள்விக்கப்பட்டது