வில்லாபுரம்

ஆள்கூறுகள்: 9°53′42.7″N 78°07′14.9″E / 9.895194°N 78.120806°E / 9.895194; 78.120806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லாபுரம்
Villapuram

வில்வபுரம்
புறநகர்ப் பகுதி
வில்லாபுரம் Villapuram is located in தமிழ் நாடு
வில்லாபுரம் Villapuram
வில்லாபுரம்
Villapuram
வில்லாபுரம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°53′42.7″N 78°07′14.9″E / 9.895194°N 78.120806°E / 9.895194; 78.120806
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்155 m (509 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்கள்625 012
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, கீழ வாசல், நெல்பேட்டை, சிம்மக்கல், செல்லூர், கோரிப்பாளையம், தல்லாகுளம், செனாய் நகர், யானைக்கல், ஆரப்பாளையம், தெற்கு வாசல்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மு. பூமிநாதன்
இணையதளம்https://madurai.nic.in

வில்லாபுரம் (Villapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில்,[1][2][3] 9°53'42.7"N, 78°07'14.9"E (அதாவது, 9.895200°N, 78.120800°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 155 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். வில்வமரங்கள் நிறைந்த பகுதியாக சில காலங்களுக்கு முன்னர் திகழ்ந்ததால், வில்வபுரம் என்று அழைக்கப்பட்டு, பின் அப்பெயர் மருவி வில்லாபுரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.[4]

மதுரையில் திருவிழா காலங்களில் தெய்வங்கள் வந்து தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்ட மண்டபங்கள் மண்டகப்படிகள் என்று அழைக்கப்படுகின்றன. அம்முறையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாவக்காய் மண்டபம் வில்லாபுரத்தில் அமைந்திருப்பது இவ்வூரின் சிறப்பாகும். மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் பத்துநாட்களில், நான்காவது நாளில் காலையில் இம்மண்டபத்தில் எழுந்தருளும் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரர் மாலை வரை பக்தர்களுக்கு இங்கிருந்து அருள்பாலித்து விட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் கோயில் திரும்புவர். மண்டபம் அமைந்துள்ள பகுதியில் பாகற்காய் (மருவி பாவக்காய் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது) விளைச்சல் அதிகமாகக் காணப்பட்டதால், இங்குள்ள மக்கள் அவற்றை நிவேதனமாக இறைவனுக்கு அர்ப்பணித்ததாலும், இம்மண்டபம் பாவக்காய் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.[5] மதுரை, கீழ வாசல், நெல்பேட்டை, சிம்மக்கல், செல்லூர், கோரிப்பாளையம், தல்லாகுளம், செனாய் நகர், யானைக்கல், ஆரப்பாளையம் மற்றும் தெற்கு வாசல் ஆகியவை வில்லாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். வில்லாபுரம் பகுதிக்கு, 4 கி.மீ. தூரத்திலுள்ள மதுரை - பெரியார் பேருந்து நிலையம், 6.5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மதுரை - அண்ணா பேருந்து நிலையம், 7 கி.மீ. தொலைவிலுள்ள மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் 10 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து பேருந்து சேவைகள் உள்ளன. மதுரையிலிருந்து காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டை செல்லும் பாதையில், தெற்கு வாசல் பகுதியிலிருந்து வில்லாபுரம் பகுதியை இணைக்கும் வண்ணம், இரயில்வே பாதைக்கு மேலே, சுமார் அரை கி.மீ. நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட குறுகிய பாலம் ஒன்று ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. போக்குவரத்து நெரிசல் கொண்ட இப்பகுதியில் பாலத்தில் போதிய இடமில்லாமல், வாகன நெரிசல் தொடர்கிறது.[6] போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, புதிய பாலம் ஒன்று, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாலத்திற்கு அருகில் கடந்து செல்லுமாறு, நெல்பேட்டை பகுதியில் ஆரம்பித்து அவனியாபுரம் பகுதி வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு அமையுமாறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.[7] சுமார் 4 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதி வில்லாபுரம் ஆகும்.[8] இங்குள்ள முக்கியமான சாலையான வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய சாலை, அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் வில்லாபுரம் பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.[9] வில்லாபுரம் பகுதியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. அவனியாபுரத்தில் அமைந்துள்ள மதுரை வானூர்தி நிலையம், இங்கிருந்து சுமார் 8.5 கி.மீ. தொலைவிலுள்ளது. வில்லாபுரத்தில் பூக்கள் சந்தை ஒன்று உள்ளது.[10] சுற்றியுள்ள பகுதிகளிலிருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதனால் பலனடைகின்றனர். பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வில்லாபுரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்திலேயே பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள காளியம்மன் முனியாண்டி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.[11] இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப் பள்ளி ஒன்று வில்லாபுரத்தில் இயங்குகிறது.[12]

வில்லாபுரம் பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[13] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. பூமிநாதன் ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1985) (in ta). Tamil Nadu Legislative Assembly Who's who. https://books.google.co.in/books?id=IY-2AAAAIAAJ&q=%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwj_raGjn5H8AhW2T2wGHf0lCQ8Q6AF6BAgKEAM. 
 2. Apūtaimiyyā (1992) (in ta). Peṇṇurimai pēṇiya Islām. Yācir Papḷikēṣan̲s. https://books.google.co.in/books?id=QQ0XAAAAIAAJ&q=%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwj_raGjn5H8AhW2T2wGHf0lCQ8Q6AF6BAgFEAM. 
 3. India Election Commission (1976) (in en). Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976. Election Commission, India. https://books.google.co.in/books?id=MpO2AAAAIAAJ&pg=PA439&dq=Villapuram&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj2j8b1x4P8AhXtTGwGHRvzCDIQ6AF6BAgHEAM#v=onepage&q=Villapuram&f=false. 
 4. மு.முத்துக்குமரன். "`கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்!' - பாவக்காய் மண்டபப் பெருமை சொல்லும் வில்லாபுரத்துக்காரர்கள்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
 5. "வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி.. இருவர் தொண்டால் ஊருக்கே கிடைத்த பாக்கியம்..!!". News18 Tamil. 2022-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
 6. "மதுரை தெற்குவாசல் பாலத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்: இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு "ஈரடுக்கு பாலம் - Dinamalar Tamil News". Dinamalar. 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
 7. "மதுரையில் 5 கி.மீ. நீளம்கொண்ட புதிய பறக்கும் பாலம் - விரைவில் அமைய உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல்" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/889657-traffic-congestion-of-madurai-south-gateway-bridge.html. 
 8. "மாநகராட்சியின் பெரிய கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கள் பத்தல... பத்தல... : வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தம் அவசியம் - Dinamalar Tamil News" (in ta). 2022-12-17. https://m.dinamalar.com/detail.php?id=3196210. 
 9. "எங்கு பார்த்தாலும் கரடு முரடான பள்ளம்.. ஆழமான குழிகள்.. மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சாலையின் அவலம்.." (in ta). 2022-10-14. https://tamil.news18.com/madurai/avaniyapuram-villapuram-housing-board-road-on-bad-condition-818905.html. 
 10. "ஆடி பெருக்கை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு". www.dinakaran.com (in ஆங்கிலம்). Archived from the original on 2022-12-24. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
 11. "Arulmigu Kaliamman Muniyandiswamy Temple, Villapuram, Madurai - 625012, Madurai District [TM032023].,காளியம்மன்,காளியம்மன்". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-23.
 12. "மதுரை வில்லாபுரம் அரசு பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் சேர்க்கை :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
 13. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லாபுரம்&oldid=3719940" இலிருந்து மீள்விக்கப்பட்டது