மதுரை - பெரியார் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் என்பது மதுரை மாநகராட்சியில் மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் முதலில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், நகர் விரிவாக்கத்தால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு, மாட்டுத்தாவணிப் பகுதியில் புதிதாக மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்பு நகரப் பேருந்து நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியினுள்ளிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான், அழகர் கோவில் போன்ற ஊர்களின் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவற்றையும் காணவும்[தொகு]