நெல்பேட்டை

ஆள்கூறுகள்: 9°55′23.2″N 78°07′31.4″E / 9.923111°N 78.125389°E / 9.923111; 78.125389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்பேட்டை
Nelpettai
புறநகர்ப் பகுதி
நெல்பேட்டை Nelpettai is located in தமிழ் நாடு
நெல்பேட்டை Nelpettai
நெல்பேட்டை
Nelpettai
நெல்பேட்டை, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°55′23.2″N 78°07′31.4″E / 9.923111°N 78.125389°E / 9.923111; 78.125389
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்159 m (522 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625 001
தொலைபேசி குறியீடு0452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், யானைக்கல், கீழ வாசல், ஆரப்பாளையம் மற்றும் தெற்கு வாசல்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மு. பூமிநாதன்
இணையதளம்https://madurai.nic.in

நெல்பேட்டை (Nelpettai) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] நெல்பேட்டையில் முசுலீம்கள் அதிகம் வாழுகின்றனர்.[2] அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தேவைப்படும் மீன், ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி ஆகியவை விற்பனை செய்யும் கடைகள் நெல்பேட்டையில் அதிகம்.[3][4] அருகிலுள்ள கீழ வெளி வீதி, வடக்கு வெளி வீதி, தெற்கு வெளி வீதி, முனிச்சாலை, கீழ மாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி போன்றவை மக்கள் நெருக்கம் மிக்க முக்கியமான வீதிகளாகும். நெல்பேட்டையை ஒட்டிச் செல்லும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் 133 ஆண்டுகளைக் கடந்து பயனளித்துக் கொண்டிருக்கிறது.[5] மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ₹175.80 கோடி மதிப்பிலான பாலம் அமைக்கும் திட்டம் நெடுஞ்சாலைத்துறையால் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தப் பாலம் 3.2 கி.மீ. நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக,[6] நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பிலிருந்து மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே, மதுரை மாநகராட்சி பசுமைப் பூங்கா வரை கட்டப்படவிருக்கிறது.[7] தசாப்தங்கள் பல கடந்து இன்னும் சுவைபட அசைவ உணவுகளை வழங்கிக் கொண்டிருக்கும் அம்சவல்லி பவன் அசைவ உணவகம், நெல்பேட்டையில் கீழ வெளி வீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.[8]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெல்பேட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°55'23.2"N, 78°07'31.4"E (அதாவது, 9.923100°N, 78.125400°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

மதுரை, செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், யானைக்கல், கீழ வாசல், தெற்கு வாசல் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை நெல்பேட்டைக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

மதுரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிக அளவில் பேருந்து சேவைகள் நெல்பேட்டை பகுதி வழியாக நடைபெறுகின்றன. நெல்பேட்டையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளது. மேலும், இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில், மதுரையின் நடுப்பகுதியில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மற்றும் சுமார் 2.5 கி.மீ. தொலைவில் மதுரை - அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலிருந்தும் நெல்பேட்டை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

அவனியாபுரத்தில் அமைந்துள்ள மதுரை வானூர்தி நிலையம், இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ளது.

கல்வி[தொகு]

பள்ளி[தொகு]

அரசுப் பள்ளியான மதுரை மாநகராட்சி உமறுப்புலவர் பள்ளி, நெல்பேட்டையில் இயங்கி வருகிறது.

வர்த்தகம்[தொகு]

நெல்பேட்டையில், நெல் மற்றும் இதர தானியங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகளவில் நடைபெறுகின்றன.

ஆன்மீகம்[தொகு]

பள்ளிவாசல்[தொகு]

முசுலீம்கள் தொழுகைக்காக, நெல்பேட்டையில் சுங்கம் பள்ளிவாசல் ஒன்று உள்ளது.

அரசியல்[தொகு]

நெல்பேட்டை பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. பூமிநாதன். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Faultlines. Institute for Conflict Management. 2005. https://books.google.co.in/books?id=l4XaAAAAMAAJ&q=Nelpettai&dq=Nelpettai&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiks8bRxfX7AhV81jgGHWkwB8wQ6AF6BAgDEAM#Nelpettai. 
  2. "10-day anti-CAA protest kickstarts at Nelpettai". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-12-13.
  3. "Renovated abattoir opened at Nelpettai". The Hindu (in Indian English). 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2022-12-13.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. பாரிஸ்,என்.ஜி.மணிகண்டன், செ சல்மான். "ஆல்பர்ட் விக்டர் பாலம்... மதுரையின் கம்பீரமான அடையாளத்துக்கு வயது 131!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
  6. "பெருமாளே... இதென்ன சோதனை: கள்ளழகர் திருக்கண் மண்டபங்களுக்கு சிக்கல் வருமோ - Dinamalar Tamil News" (in ta). https://m.dinamalar.com/detail.php?id=3189813. 
  7. "போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் புதிய மேம்பாலம்: 3 மாதங்களில் பணி துவங்குகிறது". https://www.dinakaran.com/news_detail.asp?Nid=818593. 
  8. "மதுரையில் கட்டாயம் ருசிக்க வேண்டிய நெல்பேட்டை அம்சவல்லி பிரியாணி.. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்?" (in ta). 2022-08-27. https://tamil.news18.com/madurai/madurai-amsavalli-bhavan-briyani-restaurant-stmap-792563.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்பேட்டை&oldid=3728897" இலிருந்து மீள்விக்கப்பட்டது