மதுரை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரை
Madurai lok sabha constituency.png
மதுரை மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 1952-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்

இரா. கோபாலகிருஷ்ணன்

[1]
கட்சி அஇஅதிமுக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 1,022,421 [2]
அதிகமுறை வென்ற கட்சி இந்திய தேசிய காங்கிரசு (8 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் 188. மேலூர்
189. மதுரை கிழக்கு
191. மதுரை வடக்கு
192. மதுரை தெற்கு
193. மதுரை மத்தி
194. மதுரை மேற்கு

மதுரை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. மக்களவைத் தொகுதிகள் வரிசையில் 32வதாக இடம்பெறுகிறது.

தொகுதி மறு சீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பின் கீழ் மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம் விருதுநகர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

இதுவரை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்[தொகு]

இத்தொகுதியில் காங்கிரசு கட்சி எட்டு முறை வென்றுள்ளது. சிபிஎம் 3 முறையும், சிபிஐ ஒரு முறையும் வென்றுள்ளன. இந்தத் தொகுதியில் இதுவரை திமுக, அதிமுக வென்றதில்லை.

இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும் -

14வது மக்களவை தேர்தல் முடிவு[தொகு]

பி. மோகன் - சிபிஎம் - 4,14,433

ஏ.கே. போசு - அதிமுக - 2,81,593

வெற்றி வேறுபாடு 1,32,840 வாக்குகள்

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

12 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் மு. க. அழகிரி சிபிஎம்மின் பி. மோகனை 1,40,985 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மு. க. அழகிரி திமுக 4,31,295
பி. மோகன் சிபிஎம் 2,90,310
கே. கவிஅரசு தேமுதிக 54,419
தர்பார் இராஜா பகுஜன் சமாஜ் கட்சி 3,752
எசு. வேல்துரை சுயேச்சை 4,712

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.[3] இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கோபாலகிருஷ்ணன் அ.தி.மு.க 4,54,167
வ.வேலுச்சாமி தி.மு.க 2,56,731
சிவமுத்துகுமார் தே.மு.தி.க 1,47,300
பாரத் நாச்சியப்பன் காங் 32,143

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
77.48% 67.88% 9.60%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  3. "Bharathi Kannamma begins poll campaign". The Hindu Daily (01 ஏப்ரல் 2014). பார்த்த நாள் 01 ஏப்ரல் 2014.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  5. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.

வெளியிணைப்புகள்[தொகு]