உள்ளடக்கத்துக்குச் செல்

சுயேச்சை (அரசியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுயேட்சை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரசியலில், சுயேச்சை (independent) எனப்படுபவர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அரசியல்வாதி. இவர்கள் பொதுவாக ஒரு நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான கொள்கை வேறுபாடுகளுக்கு நடுவில் நிற்பவர்களாக இருப்பர். அல்லது அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதாத சில பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். வேறு சிலர் அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்தவர்களாக, ஆனால் அக்கட்சியின் சின்னங்களுக்குக் கீழே போட்டியிட விரும்பாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பொது அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவர்.

இந்தியா

[தொகு]

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றிற்கு சுயேட்சைகள் பலர் தேர்ந்த்தெடுக்கப்படுகின்றனர். இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலுக்குப் பிறகு 1952 இல் அமைந்த மக்களவையில் ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு அடுத்து மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 36 சுயேட்சை உறுப்பினர்கள் மக்களவையில் இருந்தனர். முதல் ஐந்து மக்களவைகளில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட சுயேட்சைகள் இருந்தனர். நெருக்கடி நிலைக்குப் பிறகு அமைந்த 1977 மக்களவையில் சுயேட்சைகளின் எண்ணிக்கை ஏழாக சரிந்தது. 1980 இல் அது மேலும் குறைந்து நான்கு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1991 இல் ஒரே ஒரு சுயேட்சை மட்டுமே மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். 1996 தேர்தலில் சுயேட்சைகளில் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. 2014 மக்களவையில் சுயேட்சைகளின் எண்ணிக்கை மூன்றாக சரிந்தது. 2019 தேர்தலில் நான்கு சுயேட்சைகள் தெரிவுபெற்றனர்.[1]

இலங்கை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயேச்சை_(அரசியல்)&oldid=3938042" இலிருந்து மீள்விக்கப்பட்டது