தென் சென்னை மக்களவைத் தொகுதி
தென் சென்னை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தென் சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 19,36,209[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 22. விருகம்பாக்கம் 23. சைதாபேட்டை 24. தியாகராய நகர் 25. மைலாப்பூர் 26. வேளச்சேரி 27. சோழிங்கநல்லூர் |
தென் சென்னை மக்களவைத் தொகுதி (Chennai South Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 3வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இத்தொகுதியில், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றன.
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்
[தொகு]- பேரறிஞர் அண்ணா, டி. டி. கிருஷ்ணமாச்சாரி, முரசொலி மாறன், இரா. வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா பாலி, த.இரா. பாலு ஆகிய புகழ் பெற்றவர்கள் வென்ற தொகுதி இது.
- தென் சென்னை தொகுதி திமுக வசம் அதிக முறை இருந்துள்ளது. மொத்தம் 7 முறை திமுக வென்றுள்ளது. அடுத்தபடியாக இதை காங்கிரசு 5 முறை கைப்பற்றியுள்ளது. இங்கு அதிமுகவுக்கு இரண்டு முறை வெற்றி கிடைத்துள்ளது.
வாக்காளர்கள் எண்ணிக்கை
[தொகு]தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர்கள் |
மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 9,00,950 | 8,94,141 | 313 | 17,95,404 | 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | 9,61,904 | 9,73,934 | 371 | 19,36,209 | 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1] |
வாக்குப்பதிவு சதவீதம்
[தொகு]தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 62.66% | - | [4] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 60.37% | ↓ 2.29% | [3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]திமுகவின் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனை, 226,016 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
தமிழச்சி தங்கப்பாண்டியன் | திமுக | 5,16,305 |
தமிழிசை சௌந்தரராஜன் | பாஜக | 2,90,289 |
மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன் | அதிமுக | 1,72,396 |
சு. தமிழ்ச்செல்வி | நாதக | 83,911 |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]இத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தமிழச்சி தங்கப்பாண்டியன், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தனனை 2,62,223 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[5]
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
தமிழச்சி தங்கப்பாண்டியன் | திமுக | 1632 | 5,64,872 | 50.17% | |
மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன் | அதிமுக | 497 | 3,02,649 | 26.88% | |
ஆர். ரங்கராஜன் (இ.ஆ.ப - ஓய்வு) | மக்கள் நீதி மய்யம் | 131 | 1,35,465 | 12.03% | |
ஏ. ஜே. ஷெரின் | நாம் தமிழர் கட்சி | 66 | 50,222 | 4.46% | |
ஈ. சுப்பைய்யா | அமமுக | 40 | 29,522 | 2.62% | |
நோட்டா | - | - | 53 | 16,891 | 1.5% |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]அதிமுகவின் மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன், திமுகவின் டி. கே. எஸ். இளங்கோவனை, 1,36,625 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[6]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன் | அதிமுக | 4,38,404 |
டி. கே. எஸ். இளங்கோவன் | திமுக | 3,01,779 |
இல. கணேசன் | பாஜக | 2,56,786 |
எஸ். வி. ரமணி | இதேகா | 24,420 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]43 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சி. இராஜேந்திரன், திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாரதியை, 33,935 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
சி. இராஜேந்திரன் | அதிமுக | 3,08,567 |
பாரதி | திமுக | 2,75,632 |
வி. கோபிநாத் | தேமுதிக | 67,291 |
இல. கணேசன் | பாஜக | 42,925 |
சரத்பாபு | சுயேச்சை | 15,885 |
இராமசாமி @ டிராபிக் இராமசாமி | சுயேச்சை | 1,693 |
14 ஆவது மக்களவை தேர்தல் (2004)
[தொகு]திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த த. ரா. பாலு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பதர் சயீதை, 2,20,740 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
திமுக | த.இரா. பாலு | 5,64,578. |
அதிமுக | பதர் சயீத் | 3,43,838. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Special Summary Revision 2019 - PC wise Electorate in TN as per Final publication of Electoral Rolls on 31/01/2019".
- ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ 3.0 3.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chennai South Parliamentary Constituency Election and Results Update".
- ↑ "Chennai South Lok Sabha (General) Election Results".