விருதுநகர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருதுநகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Virudhunagar lok sabha constituency (Tamil).png
விருதுநகர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,484,256
சட்டமன்றத் தொகுதிகள்195. திருப்பரங்குன்றம்
196. திருமங்கலம்
204. சாத்தூர்
205. சிவகாசி
206. விருதுநகர்
207. அருப்புக்கோட்டை

விருதுநகர் மக்களவைத் தொகுதி (Virudhunagar Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 34வது தொகுதி ஆகும். திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன. மற்ற நான்கும் விருதுநகர் மாவட்டத் தொகுதிகள் ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திருப்பரங்குன்றம்
  2. திருமங்கலம்
  3. சாத்தூர்
  4. சிவகாசி
  5. விருதுநகர்
  6. அருப்புக்கோட்டை

மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்[தொகு]

மக்களவை காலம் உறுப்பினர் அரசியல் கட்சி
15 2009-14 மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரசு
16 2014-19 டி. இராதாகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17 2017-தற்போது மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரசு

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)[தொகு]

இத்தேர்தலில் காங்கிரசு வேட்பாளரான மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளரான அழகார்சாமியை, 1,54,554 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
மாணிக்கம் தாகூர் Hand INC.svg காங்கிரசு 6,216 4,70,883 43.81%
அழகர்சாமி Indian Election Symbol Nagara.svg தேமுதிக 1,274 3,16,329 29.43%
எஸ். பரமசிவ ஐயப்பன் Gift box icon.png அமமுக 582 1,07,615 10.01%
வி. முனியசாமி Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 314 57,129 5.32%
அருள்மொழிதேவன் Indian Election Symbol sugarcane farmer.svg நாம் தமிழர் கட்சி 449 53,040 4.94%
நோட்டா - - 205 17,292 1.61%

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு[தொகு]

2014 வாக்குப்பதிவு சதவீதம் 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான டி. இராதாகிருஷ்ணன், மதிமுக வேட்பாளரான வைகோவை, 1,45,551 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி கூட்டணி வாக்குகள்
இராதாகிருஷ்ணன் அதிமுக அதிமுக 406,694
வைகோ மதிமுக பாஜக 261,143
இரத்தினவேலு திமுக திமுக 241,505
மாணிக்கம் தாகூர் காங்கிரசு காங்கிரசு 38,482

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம் [1] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
77.38% 74.96% 2.42%

15வது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் மாணிக்கம் தாகூர், மதிமுகவின் வைகோவை, 15,764 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மாணிக்கம் தாகூர் காங்கிரசு 3,07,187
வைகோ மதிமுக 2,91,423
கே. பாண்டியராஜன் தேமுதிக 1,25,229
மு. கார்த்திக் பாரதிய ஜனதா கட்சி 17,336
வி. கனகராஜ் பகுஜன் சமாஜ் கட்சி 8,198

மேற்கோள்கள்[தொகு]

  1. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 28 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]