திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,31,724[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 49. ஜோலார்பேட்டை 50. திருப்பத்தூர் 62. செங்கம் (தனி) 63. திருவண்ணாமலை 64. கீழ்பெண்ணாத்தூர் 65. கலசப்பாக்கம் |
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (Tiruvannamalai Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 11வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு[தொகு]
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளையும், வந்தவாசியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்[தொகு]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்[தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | த. வேணுகோபால் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | வனரோஜா | அ.தி.மு.க. | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | அண்ணாத்துரை | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,64,261 | 6,67,440 | 23 | 13,31,724 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 79.89% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 78.80% | ↓ 1.09% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]
30 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் வேணுகோபால் பாமகவின் காடுவெட்டிகுரு என்னும் ஜெ. குருநாதனை 1,48,300 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.[சான்று தேவை]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
த. வேணுகோபால் | திமுக | 4,73,866 |
காடுவெட்டி குரு என்னும் ஜெ. குருநாதன் | பாமக | 2,88,566 |
எசு. மணிகண்டன் | தேமுதிக | 56,960 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
வனரோஜா | அ.தி.மு.க | 5,00,751 |
சி. என். அண்ணாதுரை | தி.மு.க | 3,32,145 |
எதிரொலி மணியன் | பாமக | 1,57,954 |
ஏ.சுப்ரமணியம் | இந்திய தேசிய காங்கிரசு | 17,854 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]
வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 19 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் சி. என். அண்ணாதுரை, அதிமுகவின், எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தியை 3,04,187 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
சி. என். அண்ணாதுரை | ![]() |
திமுக | 4,553 | 6,66,272 | 57.85% |
எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | ![]() |
அதிமுக | 1,829 | 3,62,085 | 31.44% |
ஞானசேகர் | ![]() |
அமமுக | 136 | 38,639 | 3.35% |
ரமேஷ்பாபு | ![]() |
நாம் தமிழர் கட்சி | 245 | 27,503 | 2.39% |
அருள் | ![]() |
மக்கள் நீதி மய்யம் | 142 | 14,654 | 1.27% |
நோட்டா | - | - | 94 | 12,317 | 1.07% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.