நீலகிரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீலகிரி
Nilgiris lok sabha constituency.png
நீலகிரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 1957-நடப்பு
ஒதுக்கீடு பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
தற்போதைய மக்களவை உறுப்பினர்

சி. கோபாலகிருஷ்ணன்

[1]
கட்சி அஇஅதிமுக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 1,003,168[2]
அதிகமுறை வென்ற கட்சி இந்திய தேசிய காங்கிரசு (7 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் 107. பவானிசாகர்
108. உதகமண்டலம்
109. கூடலூர் (SC)
110. குன்னூர்
111. மேட்டுப்பாளையம்
112. அவினாசி (SC)

நீலகிரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள்:

  • பவானிசாகர் (தனி)
  • உதகமண்டலம்
  • கூடலூர் (தனி)
  • குன்னூர்
  • மேட்டுப்பாளையம்
  • அவனாசி

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் மேட்டுப்பாளையம், அவனாசி (தனி), தொண்டாமுத்தூர், குன்னூர் (தனி), உதகமண்டலம், கூடலூர். தொகுதி மறு சீரமைப்புக்கு பின் பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,15,957 6,25,453 27 12,41,437

இங்கு வென்றவர்கள்[தொகு]

  • 1957-62 - சி.நஞ்சப்பா - காங்கிரசு.
  • 1962-67 - அக்கம்மா தேவி - காங்கிரசு.
  • 1967-71 - நஞ்சே கெளடர் - சுதந்திரா கட்சி.
  • 1971-77 - மாதே கெளடர் - திமுக.
  • 1977-80 - ராமலிங்கம் - அதிமுக.
  • 1980-84 - இரா. பிரபு - காங்கிரசு.
  • 1984-89 - இரா. பிரபு - காங்கிரசு.
  • 1989-91 - இரா. பிரபு - காங்கிரசு.
  • 1991-96 - இரா. பிரபு- காங்கிரசு.
  • 1996-98 - எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் - காங்கிரஸ்.
  • 1998-99 - மாஸ்டர் மதன் - பாஜக.
  • 1999-04 - மாஸ்டர் மதன் - பாஜக.
  • 2004-09 - இரா. பிரபு - காங்கிரசு.
  • 2009-14 - ஆ. இராசா - திமுக
  • 2014- - கோபால கிருஷ்ணன்

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

இரா. பிரபு (காங்கிரசு) - 4,94,121.

மாஸ்டர் மதன் (பாஜக) - 2,57,619.

வெற்றி வித்தியாசம் - 2,36,502 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

14 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஆ. இராசா மதிமுகவின் சி. கிருட்டிணனை 86,021வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆ. இராசா திமுக 3,16,802
சி. கிருட்டிணன் மதிமுக 2,30,781
எசு. செல்வராசு தேமுதிக 76,613
எசு. பதிரன் கொமுபே 32,776
எசு. குருமூர்த்தி பாசக 18,690
சி. வேல்முருகன் சுயேச்சை 11,979

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி.கோபாலகிருஷ்ணன் அதிமுக 4,63,700
ஆ. இராசா திமுக 3,58,760
பி.காந்தி காங் 37,702

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
70.79% 73.43% 2.64%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  3. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 2 பெப்ரவரி 2014.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  5. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

உசாத்துணை[தொகு]