நாகர்கோவில் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாகர்கோவில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் நாகர்கோவில் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதியதாக உருவாகிய தொகுதி கன்னியாகுமரி. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர். புதிய கன்னியாகுமரி தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.


இங்கு வென்றவர்கள்[தொகு]

 • 1951 - ஏ. நேசமணி (டிடிசி)
 • 1957 - தானுலிங்கம் நாடார் (காங்கிரசு)
 • 1962 - ஏ.நேசமணி (காங்கிரசு)
 • 1967 - ஏ.நேசமணி (காங்கிரசு)
 • 1969 இடைத்தேர்தல் - காமராசர் (ஸ்தாபன காங்கிரசு)
 • 1971 - காமராசர் (ஸ்தாபன காங்கிரசு)
 • 1977 - குமரி ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரசு)
 • 1980 - என். டென்னிஸ் (காங்கிரசு)
 • 1984 - என். டென்னிஸ் (காங்கிரசு)
 • 1989 - என். டென்னிஸ் (காங்கிரசு)
 • 1991 - என். டென்னிஸ் (காங்கிரசு)
 • 1996 - என். டென்னிஸ் (தமாகா)
 • 1998 - என். டென்னிஸ் (தமாகா)
 • 1999 - பொன். இராதாகிருஷ்ணன் (பாஜக)
 • 2004 - ஏ.வி. பெல்லார்மின் (சிபிஎம்)

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

பெல்லார்மின் (சிபிஎம்) 4,10,091

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) 2,45,797

வெற்றி வித்தியாசம் - 1,65,294 வாக்குகள்

உசாத்துணை[தொகு]

Helan devidson (Dravida munatra kazhagam)