திருவள்ளூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவள்ளூர்
மக்களவைத் தொகுதி
Thiruvallur lok sabha constituency (Tamil).png
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1951-1957
2009-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
தற்போதைய மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்
கட்சிஇதேகா
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்17,02,114[1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (4 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
4. திருவள்ளூர்
5. பூந்தமல்லி (தனி)
6. ஆவடி
9. மாதவரம்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (Thiruvallur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 1வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இந்த தொகுதியில் முன்னர் 1951 முதல் 1962 வரை மூன்று தேர்தல்கள் நடைபெற்றது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

சிறீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி(இப்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. பொன்னேரி (தனி)
  3. திருவள்ளூர்
  4. பூந்தமல்லி (தனி)
  5. ஆவடி
  6. மாதவரம்

வென்றவர்கள்[தொகு]

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1951 மரகதம் சந்திரசேகர் இதேகா பி. நடேசன் இதேகா
1957 ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு இதேகா ஏ. ராகவா ரெட்டி சுயேட்சை
1962 வி. கோவிந்தசாமி நாயுடு இதேகா எம். கோபால் திமுக
2009 பொ. வேணுகோபால் அதிமுக எஸ். கயாத்திரி திமுக
2014 பொ. வேணுகோபால் அதிமுக இரவிக்குமார் விசிக
2019 கே. ஜெயக்குமார்[2] இதேகா பொ. வேணுகோபால் அதிமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 8,52,275 8,49,577 262 17,02,114 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 70.57% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 73.73% 3.16% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

14 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் பி. வேணுகோபால் திமுகவின் காயத்திரியை 31,673 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பொ. வேணுகோபால் அதிமுக 3,68,294
காயத்திரி திமுக 3,36,621
சுரேஷ் தேமுதிக 1,10,452
பி. ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சி 10,746

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

அ.தி.மு.க வேட்பாளர் பொன். வேணுகோபால் வெற்றி பெற்றார்.

வேட்பாளர் கட்சி கூட்டணி வாக்குகள்
டாக்டர். பொ. வேணுகோபால் அதிமுக அதிமுக 6,28,499
இரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக 3,05,069
வி. யுவராஜ் தேமுதிக பாசக 2,04,734
கே. ஜெயக்குமார் காங்கிரசு காங்கிரசு 43,960

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் டாக்டர் கே. ஜெயக்குமார், அதிமுக வேட்பாளரான, பொ. வேணுகோபாலை, 3,56,955 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
கே. ஜெயக்குமார் Hand INC.svg இந்திய தேசிய காங்கிரசு 3,199 7,67,292 54.49%
பொ. வேணுகோபால் Indian Election Symbol Two Leaves.png அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1,063 4,10,337 29.14%
எம். லோகரெங்கன் Indian Election Symbol Battery Torch.png மக்கள் நீதி மய்யம் 176 73,731 5.24%
எம். வெற்றிசெல்வி Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 162 65,416 4.65%
பொன். ராஜா Gift box icon.png அமமுக 75 33,944 2.41%
நோட்டா - - 100 18,275 1.3%

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India (25 May 2019). பார்த்த நாள் 2 June 2019.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]