வட சென்னை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வட சென்னை மக்களவைத் தொகுதியில் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர்(தனி), ராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

2008ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில், ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பின்போது பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,84,904 6,92,193 238 13,77,335

இங்கு வென்றவர்கள்[தொகு]

14வது மக்களவை தேர்தலின் முடிவு[தொகு]

செ. குப்புசாமிதிமுக – 5,70,122 வாக்குகள்.

சுகுமார் நம்பியார் - பாசக – 3,16,583 வாக்குகள்.

வெற்றி வித்தியாசம் - 2,53,539 வாக்குகள்.

15வது மக்களவை தேர்தலின் முடிவு[தொகு]

29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி.கே.எசு. இளங்கோவன் சிபிஐ-யின் தா. பாண்டியனை 19,153 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக டி.கே.எசு. இளங்கோவன் 2,81,055
சிபிஐ தா. பாண்டியன் 2,61,902
தேமுதிக யுவராசு 66,375
பாசக தமிழிசை சௌந்தரராஜன் 23,350

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
டி.ஜி.வெங்கடேஷ் பாபு அதிமுக 4,06,704
ஆர்.கிரிராஜன் திமுக 3,07,000
பிஜூ சாக்கோ காங் 23,751
உ.வாசுகி மார்க்சிஸ்ட் 23,751

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம்[4] வித்தியாசம்
64.91% 63.95% 0.96%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 2 பெப்ரவரி 2014.
  2. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.
  5. உறுப்பினர் விவரம் = இந்திய மக்களவை
  6. "Constituencywise Trends – Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 16 May 2014.

வெளி இணைப்பு[தொகு]