நாம் தமிழர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாம் தமிழர் கட்சி
சுருக்கக்குறிநாதக
தலைவர்சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர்) [1]
தொடக்கம்18 மே 2010
முன்னர்நாம் தமிழர் இயக்கம்
தலைமையகம்கதவு எண் 8, மருத்துவமனை சாலை, செந்தில்நகர், போரூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா 600 116.[2]
செய்தி ஏடு௭ங்கள் தேசம்,
வேல் வீச்சு,
தீ
மாணவர் அமைப்புஅப்துல் ரகூப் மாணவர் பாசறை
இளைஞர் அமைப்புமுத்துக்குமார் இளைஞர் பாசறை
பெண்கள் அமைப்புசெங்கொடி மகளிர் பாசறை
கொள்கைதமிழ்த் தேசியம்
சூழலியம்
நிறங்கள்சிகப்பும்   மஞ்சள்  
இ.தே.ஆ நிலைபதிவு செய்த கட்சிகள்[3]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவை)
தேர்தல் சின்னம்
கரும்பு விவசாயி Indian Election Symbol sugarcane farmer.svg
கட்சிக்கொடி
Naam tamilar katchi flag.jpg
இணையதளம்
naamtamilar.org

நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய,[4][5] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும்.[6] [7].[8] இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.[9]

நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலக முகப்பு

இக்கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காணப்படுகிறது. 2009 மே 18 ஆம் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அந்தப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், இதையடுத்து அதை தொடர்ந்த ஒரு வருடத்தில் "நாம் தமிழர் கட்சி" தமிழ்த் தேசிய கொள்கைகளை பறைசாற்றிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கட்சியின் கொள்கைகள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளவை கீழ்வருமாறு[10][11]:

 1. தமிழின மீட்சியே முதன்மை நோக்கம்.
 2. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தனியரசு அமைப்பது தான். தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவது.
 3. மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவது, அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திடப் போராடுவது.
 4. தமிழை வாழவைப்பது, தமிழனை ஆள வைப்பது.
 5. சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வது.
 6. நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ அல்லது நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவது.
 7. இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பது. தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்பது.
 8. உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவது.
 9. சமனியத் தமிழரசை நிலைநாட்டுவது. பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது.
 10. உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்பது.
 11. சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்பது. சமத்துவமாய் வாழ வழிவகை செய்வது. சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவது.தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்பது.
 12. மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல! – அதை அடைவது பிறப்புரிமை! – எனவே அதற்காகப் பாடுபடுவது.
 13. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்!
 14. அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழியாகவும் பேச்சு மொழியாகவும் இடம்பெறச் செய்தல், அனைத்து இடத்திலும் தமிழே வழிபாட்டு மொழியாகவும் வழக்காடு மொழியாகவும் இருக்கச் செய்தல்.
 15. தமிழ்வழியில் கற்றோருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு எனும் நிலையினை உருவாக்குதல்.
 16. ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்பது.
 17. சமயச் சார்பற்று நடத்தல்.மேலும் தனிப்பட்ட நபர்களின் சமயங்களில் தலையிடாது இருப்பது.
 18. அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம். கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்
 19. மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவது.
 20. அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவது. அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்பது.
 21. தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்பது, கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்பது!
 22. அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவது.
 23. மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவது. அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வது.
 24. இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்பது. (எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.
 25. பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்பது.
 26. அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நிதீமன்றம்! நிதீமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவது.
 27. சிலம்பம், களரி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பது.[12][13][14]

2016 சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டு கொடி

2016 ஆம் ஆண்டிலிருந்துதான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது. இதற்கு முந்தைய 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 4,58,104 வாக்குகளுடன், சதவிகித அடிப்படையில் 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடம் வந்தது.[15][16][17][18]

2017 டாக்டர் ராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்

டாக்டர் ராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் 3802 வாக்குகள் பெற்று 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது[19][20][21][22][23]

கட்சியின் சின்னம்

கட்சியின் சின்னம்

2019 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாய் அறிவித்து அதற்கானச் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட 'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னம் மறுக்கப்பட்டது.[சான்று தேவை]அதனை மேகாலாயாவிலுள்ள ஒரு மாநிலக் கட்சி தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்டச் சின்னமாகப் பெற்றுவிட்டது ௭னக் கூறி மறுத்தார்கள்.[யார்?]பிறகு தேர்தல் ஆணையத்தின் சின்னப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கோரியதால், அதனை ஒதுக்கினார்கள்.[24].ஆனால் அச்சின்னத்தை வாக்குப்பதிவு ௭ந்திரத்தில் அச்சிடுகிறபோது தெளிவற்றதாக, மிகவும் மங்கலானதாகப் பொறித்து இருட்டடிப்பு செய்தார்கள்.[யார்?] இதுகுறித்து முறையிட உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் நாம் தமிழர் கட்சி அணுகியபோதும், அதற்கான நீதி நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவே இல்லை.[25][சான்று தேவை]

2019 நாடாளுமன்ற தேர்தல்

ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 23.03.2019 அன்று மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.[26] இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார் சீமான். இதில் நீலகிரி மக்களவை தொகுதி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 26,995 வாக்குகளைப் பெற்றது.

வேட்பாளர் பட்டியல்

2019 இந்திய பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பட்டியல்

22 தொகுதி இடைத்தேர்தல்-2019

18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார் சீமான்.[27][28]

2021 சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டுயிட்டது. மார்ச்சு 7, 2021 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[29][30]புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். 14 ஆண்; 14 பெண் வேட்பாளர்கள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கட்சியின் வளர்ச்சி

வருடம் தேர்தல் பெற்ற வாக்குகள் விழுக்காடு %
2016 சட்டமன்ற தேர்தல் 4,58,104 1.10%
2017 ராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல் 3,802 2.15%
2019 22 தொகுதி இடைத்தேர்தல்
தமிழகம் 1,38,419 3.15%
புதுச்சேரி 1,084 4.72%
மொத்த வாக்குகள் 1,39,503
2019 நாடாளுமன்ற தேர்தல்
தமிழகம் 16,45,185 3.89% [31]
வேலூர் 26,995 2.63%
புதுச்சேரி 22,857 2.89%
மொத்த வாக்குகள் 16,95,037
2021 சட்டமன்ற தேர்தல்
தமிழகம் 31,08,906 6.72%
புதுச்சேரி 28,189 3.4%
மொத்த வாக்குகள் 31,37,095

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

 1. "Naam Tamilar Katchi Candidate List". Naam Tamilar Katchi. 2016-06-01 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Naam Tamilar Katchi.pdf" (PDF). Election Commission of India. 2016-06-16 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 2013-06-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 3. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. 9 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. "எங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு". Text " திசம்பர் மாத இதழ் – 2018" ignored (உதவி)
 5. "வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா? – சீமான் கண்டனம்".
 6. "சீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா ?".
 7. "என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்! - சீமான் நம்பிக்கை".
 8. "தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு".
 9. "திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதால் மன உளைச்சலில் உள்ளோம் - நாம் தமிழர் சாகுல் ஹமீது!".
 10. "நாம் தமிழர் கட்சி கொள்கைகள்". 10 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
 11. "கஜா புயல் : நாம் தமிழர் கட்சி ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்".
 12. "எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்".
 13. "தமிழ்த் தேசியப் பொங்கல் பெருவிழா வாழ்த்து – சீமான்".
 14. "எங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு". Text " நவம்பர் மாத இதழ் – 2018" ignored (உதவி)
 15. "காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்".
 16. "உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்!".
 17. "'மீண்டும் காங்கிரஸைத் தோற்கடிப்போம்!' - தேர்தல் பிரசாரத்தைக் கையில் எடுத்த சீமான்".
 18. "234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்". Text " 234 MLA Candidates Introduced By Naam Tamilar Seeman" ignored (உதவி)
 19. "திருவாரூரில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி".
 20. "திருவாரூர் இடைத்தேர்தல் - முதலாவதாக வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி".
 21. "திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு".
 22. "திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் தனித்துப் போட்டி!".
 23. "பத்திரிக்கையாளர் சந்திப்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ்த்தேசிய கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு". Text " நாம் தமிழர் கட்சி" ignored (உதவி)
 24. "நாம் தமிழர் கட்சி புதிய விவசாயி சின்னம் அறிமுகம்".
 25. "சின்னம் தெளிவாக இல்லையென வடசென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து".
 26. "வேட்பாளர்கள் அறிமுகம்".
 27. "திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி திகழும்: சீமான் பேச்சு".
 28. "பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு".
 29. "234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்".
 30. "நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி".
 31. "1.07 டு 3.87%... 'நாம் தமிழர்' வாக்குவங்கி அதிகரித்தது எப்படி?".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_தமிழர்_கட்சி&oldid=3427204" இருந்து மீள்விக்கப்பட்டது