பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியாபுரம் (தனி), வரகூர்(தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.

பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. மணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

முன்பு தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் பொதுத் தொகுதியாக உள்ளது.

மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்

 • 1951 - பூரரங்கசாமி படையாச்சி - டிஎன்டி
 • 1957 - பழனியாண்டி -காங்.
 • 1962 - இரா.செழியன் - திமுக
 • 1967 - துரையரசு - திமுக
 • 1971 - துரையரசு - திமுக
 • 1977 - அசோக்ராஜ் - அதிமுக
 • 1980 - கே.பி.எஸ். மணி- காங்.
 • 1984 - எஸ். தங்கராசு - அதிமுக
 • 1989 - அசோக்ராஜ் - அதிமுக
 • 1991 - அசோக்ராஜ் - அதிமுக
 • 1996 - ஆ. ராசா- திமுக
 • 1998 - கபி. ராஜரத்தினம் - அதிமுக
 • 1999 - ஆ. ராசா - திமுக
 • 2004 - ஆ. ராசா - திமுக
 • 2009 - நெப்போலியன் - திமுக
 • 2014 - மருதராஜன் - அதிமுக

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி. நெப்போலியன் அதிமுகவின் கே. கே. பாலசுப்பரமணியனை 77,604 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
டி. நெப்போலியன் திமுக 3,98,742
கே. கே. பாலசுப்பரமணியன் அதிமுக 3,21,138
துரை காமராஜ் தேமுதிக 74,317
ஜி. செல்வராஜ் பகுஜன் சமாஜ் கட்சி 5,014

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மருதராஜன் அ.தி.மு.க 4,62,693
சீமானூர் பிரபு தி.மு.க., 2,49,645
பாரிவேந்தர் ஐ.ஜே.கே 2,38,887
ராஜசேகரன் காங் 31,998

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
79.35% 80.02% 0.67%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
 2. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]