1952-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தங்கவேலு 20,524 (13.01%) வாக்குகள் பெற்றபோதிலும் பொதுப்பிரிவில் பரமசிவம் அதிக வாக்குகள் பெற்றதால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் பழனிமுத்து அதிக வாக்குகள் பெற்றதால் அவர் தேர்வானார்.
1957-இல் தனி தொகுதியான இதற்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணனும் பொது பிரிவில் அதிக வாக்குகள் பெற்ற கிருசுணசாமியும் தேர்வானார்கள். பொது பிரிவில் ராசா சிதம்பரம் 20,883 (12.05%) பெற்று 2-ஆம் இடம் பெற்றபோதிலும் தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
1977-இல் ஜனதாவின் ஆர். சந்திர போசு செல்லையா 8,826 (13.34%) வாக்குகள் பெற்றார்.
1980-இல் சுயேச்சை கே. வடிவேலு 16,155 (23.09%) வாக்குகள் பெற்றார்.
1989-இல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21,300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
2006-இல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12,007 வாக்குகள் பெற்றார்.