குன்னம் (சட்டமன்றத் தொகுதி)
குன்னம், பெரம்பலூர் மாவட்டத்தின்[1] 2011 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி உருவாகி இதுவரை 2 சட்டமன்ற தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. குன்னம் தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு 1967-ம் ஆண்டு முதல் வரகூர் (தனி) என்ற சட்டமன்ற தொகுதி இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011-ம் ஆண்டு குன்னம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.
குன்னம் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் செந்துறை வட்டப் பகுதிகளும் உள்ளன.
இத்தொகுதியில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சளும், செந்துறை தாலுகா பகுதிகளில் பருத்தி, முந்திரி உள்ளிட் டவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.சுண்ணாம்பு கல்குவாரிகளும் அதிகம் செயல்பட்டு வருகிறது. செந்துறை தாலுகாவில் தனியார் சிமெண்டு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதஐயர் தனது பெற்றோருடன் தங்கி பயின்றதும் இந்த தொகுதியில்தான்.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- செந்துறை வட்டம்
- குன்னம் வட்டம் (பகுதி)
திருமாந்துறை (பெரம்பலூர்), பெண்ணக்கோணம் (தெற்கு), அத்தியூர் (தெற்கு), அகரம்சீகூர், வசிஷ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஊராட்சி, கிழுமத்தூர் (தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு), வடக்கலூர் (பெரம்பலூர்), பெருமத்தூர் (வடக்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), பெருமத்தூர் (தெற்கு) ஆண்டிகுரும்பலூர், நன்னை (மேற்கு), நன்னை (கிழக்கு), ஓலைப்பாடி (பெரம்பலூர்) (மேற்கு), துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு),(தேனூர்)(மேற்கு) பரவாய் (கிழக்கு), பரவாய் (மேற்கு), மலைராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), எழுமுர் (மேற்கு), அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம், பெரியம்மாபாளையம், குன்னம், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டைக்குடி, காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு) பெரியவெண்மணி (பெரம்பலூர்) (கிழக்கு), பெரியவெண்மணி (மேற்கு), மேலமாத்தூர் ஊராட்சி, அழகிரிப்பாளையம் (பெரம்பலூர்), தொண்டப்பாடி, கூத்தூர் (பெரம்பலூர்), ஆதனூர் (தெற்கு), ஆதனூர் (வடக்கு), கொட்டரை ஊராட்சி, சாத்தனூர், சிறுகன்பூர் ஊராட்சி (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி ஊராட்சி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) கொளத்தூர் (கிழக்கு) திம்மூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம் (பெரம்பலூர்), ஆத்தூர், சில்லக்குடி (பெரம்பலூர்) (வடக்கு) மற்றும் சில்லக்குடி (தெற்கு) கிராமங்கள்.
இலப்பைகுடிக்காடு (பேரூராட்சி).[3]
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | இரண்டாம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011[4] | எஸ். எஸ். சிவசங்கர் | திமுக | 81,723 | துரை காமராஜ் | தேமுதிக | 58,766 | 22,957 |
2016 | ஆர். டி. ராமச்சந்திரன் | அதிமுக | 78,218 | த. துரைராஜ் | திமுக | 59,422 | 18,796 |
2021 | எஸ். எஸ். சிவசங்கர் | திமுக | 1,03,922 | ஆர். டி. ராமச்சந்திரன் | அதிமுக | 97,593 | 6,329 |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
2,05,044 | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
3,024 | 1.47%[5] |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் விவரக்குறிப்புகள்".
- ↑ குன்னம் தொகுதி கண்ணோட்டம் -2021
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-05-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-27 அன்று பார்க்கப்பட்டது.