உள்ளடக்கத்துக்குச் செல்

இலப்பைகுடிக்காடு

ஆள்கூறுகள்: 11°23′15″N 79°00′57″E / 11.3876°N 79.0157°E / 11.3876; 79.0157
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலப்பைக்குடிக்காடு
இலப்பைக்குடிக்காடு
அமைவிடம்: இலப்பைக்குடிக்காடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°23′15″N 79°00′57″E / 11.3876°N 79.0157°E / 11.3876; 79.0157
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்

வட்டம் = குன்னம்

ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,891 (2011)

2,642/km2 (6,843/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.5 சதுர கிலோமீட்டர்கள் (1.7 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/labbaikudikadu

இலப்பைக்குடிக்காடு (Labbaikudikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள முதல் நிலை பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடிக்காடு பேரூராட்சி, பெரம்பலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெரம்பலூர்–தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கே திருமாந்துறையும், கிழக்கே கீழக்குடிக்காடும், தெற்கே பென்னக்கோணமும், பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் அரங்கூரும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 8 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரவல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2560 வீடுகளும், 11891 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6]

போக்குவரத்து

[தொகு]

பேருந்து

[தொகு]

இலப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை, திருச்சி , பெரம்பலூர், வ. களத்தூர், தொழுதூர், வைத்தியநாதபுரம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலூர் , துங்கபுரம், அத்தியூர், வேப்பூர், குன்னம், கிழுமத்தூர்,சு. ஆடுதுறை ஊராட்சி ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது.

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்

[தொகு]

அருகிலுள்ள விமான நிலையங்கள்

[தொகு]

பள்ளிவாசல்கள்

[தொகு]
  • மேற்கு ஜாமிஆ மஸ்ஜித்
  • பந்தே நவாஜ் மஸ்ஜிது (தைக்கால் பள்ளி)
  • கிழக்கு ஜூம்மா பள்ளிவாசல்
  • கிழக்கு பழைய பள்ளிவாசல்
  • பிலால் பள்ளிவாசல்
  • தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்
  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்

கோயில்கள்

[தொகு]
  • செல்வ விநாயகர் ஆலயம்

பள்ளிக்கூடங்கள்

[தொகு]
பள்ளியின் பெயர் துவங்கிய ஆண்டு வகுப்புகள்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1950 6-12
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1983 6-12
வேப்பூர் யூனியன் தொடக்கப்பள்ளி (மேற்கு) 1984 1-8
அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி (வடக்கு) 1-5
வேப்பூர் யூனியன் தொடக்கப்பள்ளி (கிழக்கு) 1939 1-5
ஆசியா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி 1977 LKG-5
ஏ.ஒன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி 2007 LKG-5
சலாமத் நடுநிலைப்பள்ளி 1990 1-8
சுபஹானியா ஆங்கிலப்பள்ளி 1997 LKG-5
விஸ்டம் மழலையர் பள்ளி LKG-5
தாருஸ்ஸலாம் மழலையர் பள்ளி 2010 1-5
கிட்ஜி மழலையர் பள்ளி
இக்ரா கிட்ஸ் மழலையர் பள்ளி

[7]

மருத்துவமனைகள்

[தொகு]
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
  • கே.எம்.ஏ. மருத்துவமனை
  • தினகரன் மருத்துவமனை
  • மகேந்திரன் மருத்துவமனை
  • பிரியதர்ஷினி சேகர் மருத்துவமனை
  • எஸ். எம். ஏ மருத்துவமனை
  • தாஜ் பல் மருத்துவமனை
  • இர்பா பல் மருத்துவமனை
  • சுகம் மெடிக்கல் சென்டர்
  • பிரியா கிளினிக்
  • ஹம்னா குழந்தைகள் மருத்துவமனை
  • ஜமாலி மருத்துவமனை
  • கிரஸென்ட் மருத்துவமனை

பல்துறை அரசு அலுவலகங்கள்

[தொகு]
  • பேரூராட்சி அலுவலகம்
  • கிளை அஞ்சல் நிலையம்
  • உதவி மின்செயற்பொறியாளர் அலுவலகம்
  • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
  • வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
  • கிளை நூலகம்
  • பி.எஸ்.என்.எல் மின்னணுத்தொலைப்பேசி அலுவலகம்
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சந்தை

[தொகு]

ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் வாரச்சந்தை நடைபெறுகிறது. அக்டோபர் 05, 2019 முதல் ஜமாலி நகர் பூங்கா அருகே நடைபெற்று வருகின்றது.

வங்கிக‌ள்

[தொகு]

தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள்

[தொகு]

அரசியல்

[தொகு]

இலப்பைக்குடிக்காடு குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியின் கீழ் வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. இலப்பைகுடிக்காடு பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/labbaikudikadu/population
  5. Labbaikudikadu Population Census 2011
  6. Labbaikudikadu Town Panchayat
  7. schools.org.in இணையதளத்தில்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலப்பைகுடிக்காடு&oldid=4049697" இலிருந்து மீள்விக்கப்பட்டது