அரும்பாவூர்
அரும்பாவூர் | |||||||
அமைவிடம் | 11°23′N 78°44′E / 11.38°N 78.73°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | பெரம்பலூர் | ||||||
வட்டம் | வேப்பந்தட்டை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கிரேசு இலால்ரிந்திகி பச்சாவு, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
12,467 (2011[update]) • 605/km2 (1,567/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
20.60 சதுர கிலோமீட்டர்கள் (7.95 sq mi) • 170 மீட்டர்கள் (560 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/arumbavur |
அரும்பாவூர் (ஆங்கிலம்:Arumbavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அரும்பாவூரில் உலகப்புகழ் பெற்ற மரச்சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன. அரும்பாவூர் மர வேலைப்பாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.[4]
அமைவிடம்
[தொகு]அரும்பாவூர் பேரூராட்சி, பெரம்பலூரிலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 36 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]20.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3452 வீடுகளும், 12467 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°23′N 78°44′E / 11.38°N 78.73°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170 மீட்டர் (557 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
- ↑ அரும்பாவூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Arumbavur Population Census 2011
- ↑ Arumbavur Town Panchayat
- ↑ "Arumbavur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)